புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

ஊழலற்ற ஆட்சிக்கு தமிழகத்தில் நாங்கள்; மத்தியில் மோடி: விஜயகாந்த்
தூத்துக்குடி: ஊழலற்ற ஆட்சிக்கு தமிழகத்தில் நாங்கள் என்றால், மத்தியில் நரேந்திர மோடி என விஜயகாந்த் கூறினார்.


நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ம.தி.மு.க. வேட்பாளர் ஜோயலை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, ''தற்போது மின்சாரம், வேலை, குடிநீர் கிடைக்குமா? என மக்கள் கேட்கின்றனர். இதுவரை ஆட்சி செய்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்தில் உள்ள நதிகளைக் கூட இணைக்க முன்வரவில்லை. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஆட்சி செய்தது போதும்.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைத் தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடாதா? தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சிக்கு நாங்கள் என்றால் மத்தியில் நரேந்திர மோடிதான்'' என்றார்.
ராமநாதபுரம் பேச்சு
இதைத் தொடர்ந்து இன்று (22ஆம் தேதி) இரவு ராமநாதபுரத்தில், பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும் போது, இப்பகுதியில் மீனவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மீனவர் மீட்பதற்காக ஜெயலலிதா கடிதம் மட்டுமே எழுது வருகிறார். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை தொழில் வளர்ச்சி அடையவில்லை.
 
அமைதி, வளம், வளர்ச்சி என்று சொல்கிறார்கள். அமைதி என்றால், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அவங்க வளமாக இருப்பாங்க. அதுதான் அர்த்தம்'' என்றார்.
 

ad

ad