புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014


பாமகவுக்கு வாக்கு கேட்க மறுப்பு : விஜயகாந்த் பேச்சால் குழப்பம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதியில் இன்று மாலையில் தேமுதிக தலைவர்
விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.   


தேசிய ஜனநாயக கூட்டனியில் அங்கம் வகித்துள்ள பாஜக, தேமுதிக, பாமக,  மதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,  தீவிரமாக பிரச்சாரக்களத்தில் உள்ளார். 
கிருஷ்ணகிரியில் விஜயகாந்த் பேசிய பேச்சு மக்களை குழப்பமடையச்செய்துள்ளது.   விஜயகாந்த் பிரச் சாரத்தில் பாஜக, தேமுதிக, மதிமுக கட்சிகளின் கொடிகள்தான் இருந்தது.  பிரச்சாரத்தின்போதும் விஜய காந்த், பாமகவுக்கு வாக்கு கேட்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
 பாஜக கூட்டணியில் பாமக இருக்கிறதா? இல்லையா? என்ற சூழ்நிலை இருந்து வருகிறது.  இந்த நிலையில் விஜயகாந்த் பிரச்சாரத்தால்   இந்த கூட்டணி தேர்தல் வரை கூட நீடிக்குமா என்பது தெரியவில்லை என்று மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  

ad

ad