புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014

காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டாம்: ஜி.கே.வாசன்சென்னை: மதசார்பின்மை பற்றி காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னையில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குறுந்தகடு வெளியீட்டு விழா இன்று நடந்தது. குறுந்தகட்டை வெளியிட்டு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம்
கூறுகையில், ''இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், ஐ.நா.வில் மத்திய அரசு நடுநிலை வகித்தது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அணி கேப்டன் இல்லாத கப்பல் போன்று உள்ளது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. மதசார்பின்மை குறித்து காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. சேது சமுத்திர திட்டம் கிடப்பில் உள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம்'' என்றார்.

ad

ad