புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை- ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்த இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
விடுதலை சிறுத்தைகள் கட்டித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,  ’’அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று (3-3-2014) தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு
எதிரான தீர்மானம் அதில் நிறைவேற்றப்படுமா? என்ற அய்யம் எழுந்துள்ளது.  அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் வரைவு தற்போது வெளியா கியிருக்கிறது. 

அதில், இனப்படுகொலை தொடர்பாகவோ, பன்னாட்டு விசாரணை வேண்டுமென்றோ எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் உரையாற்றிய அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்கள் இலங்கை குறித்த திருமதி நவநீதம்பிள்ளை அவர்களின் அறிக்கையைப் பாராட்டி வழிமொழிந்துள்ளார்.  முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றிய கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டு விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து இந்தியா இதுவரை கருத்து எதுவும் கூறாமல் வழக்கம்போலவே மவுனம் காக்கிறது.  வரைவுத் தீர்மானத்தைப் பார்த்துவிட்டுத்தான் தமது கருத்தைத் தெரிவிப்போம் என அது கூறி வருகிறது.
வரைவுத் தீர்மானம் இப்போது வெளிகியுள்ள நிலையில் இனப்படுகொலையை விசாரிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை என இந்தியா வலியுறுத்த வேண்டும்.  காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்திய அரசு தமது கருத்தை வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad