சனி, மார்ச் 15, 2014


மாயமான மலேசிய விமானத்தை கடத்தியது துணை பைலட்டா? கேப்டன் வீட்டிலும் சோதனை .
மலேசியாவில் இருந்து திருமதி சுப்பிரமணியம் 
ஒரு வாரம் முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH370 குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன, முதலில் விமானம் விபத்துக்குள்ளானதாக அனைவரும் நம்பி அதை தேடும் வேளையில் தற்போது விமானம்
கடத்தப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
மேலும் மலேசிய பிரதமரே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மலேசிய விமானத்தின் தொலைதொடர்பு சாதனங்கள் மனிதர்களால் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார், மேலும் விமானம் கடத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை உறுதியாக கருத வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று விமானத்தின் கேப்டன் வீட்டிலும் கோ-பைலட் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர், விமானத்தின் கோ-பைலட் முதல் நாள் காக்பீட்டில் ரஷ்யத் தோழிகளுடன் இருந்த விவரங்களும் வெளியாகியுள்ளன.
இதனால் இந்த கடத்தலை பைலட், கோ-பைலட்டும், மற்றவர்களுக்கு தொடர்புள்ளதா என்று தீவிர விசாரணையில் மலேசிய அரசு ஈடுபட்டுள்ளது
இன்னமும் திடுக்கிடும் உண்மைகள் வெளி வரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்த படத்தில் இருப்பது ரஷ்ய தோழிகளுடன் துணை பைலட்.
இன்று 5.30 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பை மலேசிய பிரதமர் ரத்து செய்துள்ளார்