புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2014



“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து
கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இது குறித்து தெளிவுபடுத்துவதற்கு எனக்கு சந்தர்ப்பத்தைத் தாருங்கள்.
நீங்கள் அனைவரும் அறிந்த விதத்தில் சர்வதேச மட்டத்தில் எவருக்கும் மின்சார கதிரையில் அமர்த்தி, தண்டனை வழங்கப்படவில்லை.
இரண்டாவது விடயம் என்னவென்றால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றே முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அதன்படி செயற்பட வேண்டிய கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு விடயத்தை உறுதியாக செயற்படுத்த வேண்டும் என்பதனை கூறக் கூடிய நிறுவனம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையாகும்.
2014 ஆம் ஆண்டு ஜெனீவா அமர்வில் இதுவரை நாம் எதிர்கொள்ளாத பாரியளவிலான சவாலொன்று விடுக்கப்படுகின்றது.
இலங்கையின் ஐனநாயகம் கருதி செயற்படுகின்ற பிரஜைகள் என்ற வகையில், இதனை அறிந்து கொண்டு எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
இல்லாவிட்டால், நாம் தொடர்ந்தும் அடிமைப்பட்டவர்களாகவே இருப்போம். சிவில் சமூகத்தை முடக்குவதற்கு பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிவில் சமூகம் என்ற வகையில் நாம் எம்மிடமே வினவ வேண்டிய கேள்வியொன்று உள்ளது. உண்மையிலேயே இந்த போட்டி முடிவடைந்து விட்டதா?
இல்லாவிட்டால், நாம் செய்யும் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுவதனால் எமது கடமைகளை தொடர்ந்தும் நிறைவேற்றுவதா?
என்று சிந்திக்க வேண்டும் என்றார் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து.

ad

ad