புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

விருதுநகர் மக்களவை அதிமுக வேட்பாளர் டி,ராதாகிருஷ்ணனை ஆதாரித்து பரிதி இளம்வழுதி செவ்வாய்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதாரித்து முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர்
பரிதி இளம்வழுதி வேட்பாளரை ஆதாரித்து விருதுநகர் பாத்திமா நகர் முக்குசாலை பகுதியில் பிரசாரம் செய்து பேசியதாவது: சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் திமுகவிலிருந்து விடுதலை கிடைத்தது. நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடந்த என்னை அழைத்து தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி கொடுத்து வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் 16-வது மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில், தமிழக முதல்வருக்கு பிரதமராகும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இதற்கு முன்பு இருமுறை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வந்தது. அப்போது, பல்வேறு இடையூறு காரணமாக யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தற்போது, வருகிற மக்களவை தேர்தல் மூலம் வந்த வாய்ப்பை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசின் உதவியோடு தமிழத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு மீட்பது, தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் சிறை பிடித்து வருதல் போன்ற உள்ளிட்ட பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன.
இதுவரையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பங்கு வகித்த திமுகவும் தீர்க்கவில்லை. கருணாநிதி குடும்பத்திற்காக கட்சி நடத்தி வருகிறார். ஆனால், முதல்வர் நாட்டுக்காக பொதுமக்களை நம்பி கட்சி நடத்தி வருகிறார். மக்கள் நலப்பிரதிநிகளாக இருந்து பெற்றுத் தரவி்ல்லை. தற்போது, அரசின் மூலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத பல்வேறு நலத்திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக செய்து வருகிறார். அதனால், வருகிற தேர்தலில் வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதாரவு அளிக்க வேண்டும் என தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.   
அப்போது உடன் ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் மூக்கையா, நகராட்சி தலைவர் மா.சாந்தி, நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ad

ad