புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014


 காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்ததால் காங்கிரசுக்கு சப்போர்ட்டாகத்தான் பேச முடியும் என்று மு.க. அழகிரி கூறினார்.
டெல்லி, சென்னை என பரபரப்புப் பயணங்களை முடித்துவிட்டு இன்று மதியம் மதுரை வந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்ர் மு.க.அழகிரி. அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கணிசமாக
வந்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவரிடம் நாம் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

புதிய தகவல்கள் ஏதாவது...?

அதான் எல்லாத்தையும் பார்த்திருப்பிங்களே, வேற என்ன புதுசா?

மதுரைக்கென்று புதுத் தகவல் ஏதாவது?


  எல்லாம் பதினேழாம் தேதி தொண்டர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசுதான் காரணமென்று தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் குற்றம் சுமத்தும்போது, டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு வரும்போது, காங்கிரஸ் ஆட்சி நன்றாக இருந்தது என்றும், மக்களுக்கான பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்றும் பேசியுள்ளீர்களே?


ஆமாம், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள். காங்கிரசுக்கு சப்போர்ட்டாகத்தான் பேச முடியும்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை வைக்க சொல்லி வலியுறுத்தியுள்ளீர்களே, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டதா?

இப்போது தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால் அறிவிக்க தாமதமாகிறது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் கருத்து கேட்டுவிட்டு ஒப்புதல் அளிப்பார்கள்.

 மதுரை திமுக வேட்பாளர் வேலுச்சாமி உங்களிடம் ஆதரவு கேட்டு வரப்போவதாக கூறியுள்ளாரே?

வரட்டும் பார்க்கலாம். நீங்களும் வாங்க.

இவ்வாறு அவர் கூறிவிட்டு சென்றார்.

ad

ad