புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

கத்தாரில் உலகக் கோப்பை நடத்த ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஃபிபா துணைத் தலைவர்

2022-இல் கத்தாரில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்ததும், அந்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (
ஃபிபா) முன்னாள் துணைத் தலைவர் ஜேக் வார்னரின் குடும்பத்தினருக்கு ரூ. 12 கோடி வழங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
2018 உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ரஷியாவிலும், 2022-ம் ஆண்டுக்கான போட்டியை கத்தாரிலும் நடத்துவது என்று கடந்த 2010-ம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது. உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் சமயம் கத்தாரில் வெயில் கொளுத்தும் என்பதால், அங்கு போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக குளிர்காலத்தில் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கத்தாருக்கு உலகக் கோப்பை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லண்டனில் இருந்து வெளியாகும் "தி டெலிகிராப்' பத்திரிகை ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
கத்தாருக்கு உலகக் கோப்பை அனுமதி கிடைத்த சில வாரங்களில் கத்தாரைச் சேர்ந்த கெம்கோ நிறுவனம், அப்போது ஃபிபா துணைத் தலைவராக இருந்த ஜேக் வார்னருக்கு ரூ.12 கோடி வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், ஃபிபாவுக்கான கத்தார் கமிட்டியின் முன்னாள் உறுப்பினருமான முஹமது பின் ஹமாமுக்குச் சொந்தமானது.
அனுமதி கொடுத்த சில தினங்களில் ஜேக் வார்னர் தனக்கு ரூ.12 கோடி வழங்குமாறு கெம்கா நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி அந்நிறுவனம் ஜேக் வார்னருக்கு பணத்தை அனுப்பி உள்ளது. வார்னர், அவரது மகன் மற்றும் அவரது ஊழியர் என 3 பேருக்கும் பணம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது என அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதியன்று இந்த தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதையும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ad

ad