புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­துங்கள் : ராம்

எதிர்­வரும் 29ஆம் திகதி நேர­கா­லத்­தோடு வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று எமது மக்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வெற்­றியை அமோக வெற்­றி­யாக மாற்றி இன ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட பிர­தான அமைப்­பா­ளரும்இ முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும் முதன்மை தமிழ் வேட்­பா­ள­ரு­மான சி.வை.ராம் தெரி­வித்­துள்ளார்.
 
தேசிய அடை­யாள அட்டை இல்­லாதோர் தமது புகைப்­ப­டத்தை கிரா­ம­சே­வ­க­ரிடம் வழங்கி தமது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி வாக்­க­ளிக்க முடியும். இதனை உட­ன­டி­யாக மேற்­கொண்டு உங்கள் வாக்­கு­ரி­மையை பாது­காத்­துக்­கொள்­ளுங்கள் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
 
இது தொடர்­பாக வேட்­பாளர் ராம் மேலும் தெரி­விக்­கையில்,
 
இலங்­கையில் அனைத்து இன மக்­க­ளையும் ஐக்­கி­யப்­ப­டுத்­திய கட்சி ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யாகும். எனவேஇ எமது கட்­சியை இத் தேர்­தலில் அமோக வெற்றி பெறச்­செய்து இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­துங்கள்.
 
அத்­தோடுஇ முதன்மை தமிழ் வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் போட்­டி­யிடும் எனக்கு எனது மக்கள் அமோ­க­மான விருப்­பு­வாக்­கு­களை வழங்கி வெற்றி பெறச்­செய்ய வேண்டும். இந்த வெற்றி மூலம் மாகாண சபையில் எனக்கு உயர் பதவி கிடைக்கும். அப் பதவி எனக்குச் சொந்­த­மா­ன­தல்ல. அது மக்­க­ளுக்கு சொந்­த­மா­னது. இதன் மூலம் எனது மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கும் பேரம் பேசும் சக்தி கிடைக்கும்.
 
என் வெற்றி உங்கள் வெற்­றி­யாகும். எனது மக்கள் எனது வெற்­றியை உறுதி செய்­து­விட்­டனர். நான் பிர­சா­ரங்­க­ளுக்கு இதை போன இட­மெல்லாம் உணர்ந்தேன். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் தமிழர் என்றால் அது ராம் தான் என மக்கள் மனதில் பதிந்து விட்­டதை உணர்­கிறேன். கடந்த காலங்­களில் இரண்டு தட­வைகள் என் மீது நம்­பிக்கை வைத்து மக்கள் என்னை மாகாண சபைக்கு அனுப்­பி­னார்கள்.
 
அந்த நம்­பிக்­கைக்கு ஒரு­போதும் நான் குந்­தகம் விளை­விக்­க­வில்லை. நான் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றி­யுள்ளேன். இதன் கார­ண­மா­கத்தான் கடந்த கொழும்பு மாந­க­ர­சபைத் தேர்­தலில் எனது மகன் ஜோன் ராமுக்கு மக்கள் அமோ­க­மான விருப்­பு­வாக்­கு­களை வழங்கி இரண்டாம் இடத்­திற்குத் தெரி­வு­செய்­தனர்.
 
இது­வொன்றே போதும்இ எனது மக்கள் சேவைக்கு கிடைத்த நற் சான்­றி­த­ழாகும். வாக்­கு­ரிமை மக்­களின் ஜன­நா­யக உரி­மை­யாகும். அதனை ஒவ்­வொரு மனி­தனும் பாவிக்­க­வேண்டும். எனவேஇ தேசிய அடை­யாள அட்டை இல்­லாதோர் உட­ன­டி­யாக தமது புகைப்­ப­ட­மொன்றை கிரா­ம­சே­வ­க­ரிடம் வழங்கி உறு­திப்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம் வாக்­க­ளிக்க முடியும்.
 
எனவேஇ தேசிய அடை­யாள அட்டை இல்­லாதோர் உட­ன­டி­யாக இதனை மேற்­கொள்­ளவும். தேர்தல் தினத்­தன்று நேர­கா­லத்­தோடு வாக்­க­ளிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றார்.

ad

ad