புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014



ஆஸ்திரேலியா இரகசிய ரேடார் தரவுகளில் துப்பு கிடைக்கலாம் என தகவல்கள்

மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்று இப்போது உலகமே தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் 26 உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் இந்த நிமிடம் வரை எந்தப்பலனும் கிடைக்கவில்லை.  விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனாலும் 11 நாட்களாகியும் விமானம் மாயமானதில், ஏறத்தாழ ஆஸ்திரேலியா அளவுக்கான பரப்பில் தேடுதல் வேட்டை நடத்தியும், எந்த துப்பும் துலங்காமல் இருப்பது மலேசியாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இனியும் விமானத்தின் கதியை விரைவில் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மலேசியா கருதுகிறது. எந்த ஒரு துப்பும் துலங்காததால் விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா பாதுகாப்பு தொடர்பான இரகசிய ரேடார் தரவுகளில் விமானத்தை கண்டுபிடிக்க குழு கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ் நகரின் ஜிந்தாலி ராணுவ தளத்தில் உள்ள ஆஸ்திரேலியா - அமெரிக்காவின் பைன் கெப் என்ற உளவு செயற்கைக்கோளின் தகவல்களை கொண்டு விமானத்தை கண்டுபிடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிந்தாலி ராணுவ தளத்தில் உள்ள ரேடார் மூலம் 37 ஆயிரம் சதுர கிமீ தூரம் அனைத்தையும் கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாயமான விமானம் குறித்தான பதிவுகளும் இதில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ரேடாரின் செயல் திறன் தென் சீன கடல் பகுதியில் வரையில் கண்காணிக்கும் அளவுக்கு வல்லமை கொண்டது. எனவே அப்பகுதியில் பறந்த மலேசிய விமானத்தை ரேடார் கண்காணித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான தகவல்களில் தொடர்ந்து ஆஸ்திரேலியா மவுனமாக உள்ளது.

ad

ad