புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

காணாமல்போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி

காணாமல் போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறினார். வாய்மூல விடைக்கான கேள்வி பதிலின் போது ஐ.தே.க. எம்.பி. முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காணமல் போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம்
அனுமதித்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இலங்கை ராடாரில் மலேஷிய விமானம் பதிவாகியுள்ளதா? இதன் உண்மை நிலை என்ன என ரவி கருணாநாயக்க எம்.பி. வினவினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் நானொன்றும் மலேஷிய விமான சேவை அமைச்சல்ல என்றாலும் காணாமல் போன விமானத்தை தேட எமது வான் பரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ad

ad