சனி, மார்ச் 15, 2014

விஜயகாந்த் செல்வாக்கு பெரும் சரிவு!
எஸ்றா சற்குணம் மூலம் தூது விடுகிறது தி.மு.க.! 'கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி’ எனச் சொல்லி குதூகலிக்கிறார் கருணாநிதி. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் வீடுதேடி வருகிறார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் படியேறிப் போய் பேசுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் விஜயகாந்த்துக்காக மு.க.அழகிரி¬யைக் கட்சியை விட்டே நீக்குகிறது தி.மு.க.
அந்தளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் டிமாண்ட் உள்ள கட்சியாக உருவெடுத்துள்ளது தே.மு.தி.க. ஆனால், நிஜ நிலைமை என்ன?நன்றி விகடன் 


'விஜயகாந்த், அறிவாலயத்துக்கு ஆதரவு தருவரா? கமலாலயம் பக்கம் கவனம் செலுத்துவாரா? சத்தியமூர்த்தி பவன் பக்கம் சாய்வாரா?’ என்கிற தேர்தல் கொதிநிலை எகிறவைக்கிறது. இப்படிப்பட்டச் சூழலில் தே.மு.தி.க-வை மட்டும் மையமாக வைத்து 'விஜயகாந்த் ரோல்’ என்ற தலைப்பில் தமிழக மக்களின் பல்ஸ் பார்க்கப் புறப்பட்டது ஜூ.வி. டீம். தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் புகுந்து புறப்பட்டு 8,721 நபர்களை நேரடியாக சந்தித்து சர்வே எடுத்தது ஜூ.வி. டீம். இதில் பெண்கள் மட்டும் 3,455 பேர். தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலித்த சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
'விஜயகாந்த் இன்னமும் அரசியல் தலைவராக ஆகவில்லை’ என்றே அதிகம் பேர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
'விஜயகாந்த்தின் செல்வாக்கு இப்போது குறைந்திருக்கிறது’ என்பது சர்வே முடிவில் தெரிகிறது. செல்வாக்கு குறைந்திருக்கிறது என அதிகபட்சமாக 43 சதவிகிதம் பேர் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
'விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் சேருவார்?’ என்கிற முக்கியமான கேள்விக்கு, தி.மு.க. கூட்டணியில்தான் சேர்வார் என அதிகபட்சமாக 31 சதவிகிதம் பேர் டிக் அடித்திருக்கிறார்கள். அதற்கு அடுத்து தனித்துப் போட்டியிடுவார் என 28 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் எந்தப் பலனும் ஏற்படாது என 43 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என 37 சதவிகிதம் பேர் சொல்லியுள்ளனர்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களை இழுத்தது, அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது என விஜயகாந்த் மீது ஆளுங்கட்சி காட்டிய எதிர்ப்புகள் பற்றிய கேள்விக்கு, 'தேர்தலில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது’ என பெரும்பாலானோர் சொல்லியிருக்கிறார்கள்.
'குடிகாரர்’ என்று அ.தி.மு.க-வினர் விஜயகாந்த்தை விமர்சிப்பது பற்றிய கேள்விக்கு, 'அதுவும் விமர்சனம்தான்’ என்று 47 சதவிகிதம் பேர் சொல்லியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
சர்வேயில் பங்கேற்றவர்களில் 24 சதவிகிதம் பேர் கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த்துக்கு வாக்களித்தவர்கள். 49 சதவிகிதம் பேர் அவருடைய கட்சிக்கு வாக்களிக்கவில்லை.
  இந்தத் தேர்தலில் விஜயகாந்த்துக்கு வாக்க​ளிப்பது பற்றிய முக்கியமான கேள்விக்கு 50 சதவிகிதம் பேர் தேர்தல் நேரத்தில்தான் முடிவெடுப்பேன் என்று சொன்னார்கள். 31 சதவிகிதம் பேர் தே.மு.தி.க-வுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்கள். 18 சதவிகிதம் பேர் மட்டுமே ஓட்டுப்போடுவேன் என்று கருத்து சொல்லி​யிருக்கிறார்கள்.
பரபர சர்வே முடிவுகள் உங்கள் பார்வைக்கு...