புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

விடுதலையான பின்னும் தொடர்கிறது அச்சுறுத்தல் - சொல்கிறார் ருக்கி பெர்ணாண்டோ
news
“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார்  மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ.
 கிளிநொச்சி - தர்மபுரம்
பகுதியில்  வைத்து கடந்த ஞாயிற்றுகிழமை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ருக்கி பெர்னாண்டோவும், அருட்தந்தை பிரவீன் மகேசனும் கைதாகி, விசாரணையின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் பின்னர்  மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ   ‘உதயன் ஒன்லைனுக்கு’  கருத்து தெரிவிக்கையில்,

 “கைது செய்யப்பட்ட எங்கள் இருவரையும் கடுமையாக விசாரித்தனர். 51 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோம்

அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் செயற்படுவதாகவும், போர் நடைபெற்ற காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு நாங்கள் அரசுக்கு எதிரான தகவல்களை வழங்கியதாகவும், எமக்கும் புலிகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும் அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது குறித்து துருவித் துருவி எம்மை விசாரித்தனர்.ஆயினும் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு நாங்கள் உட்படுத்தப்படவில்லை.

இறுதியில் கடுமையான விசாரணையின் பின்னர் எமக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று உறுதிப்படுத்திய பின்னரே நேற்று விடுதலை செய்யப்பட்டோம்.நாங்கள் தடுப்புக் காவலில் இருந்த போது பல சட்டத்தரணிகள் எம்மைப் பார்க்க வந்தபோதும் அவர்களும் அனுமதிக்கப்படவில்லை எவ்வாறாயினும் எனது கடமையைத்தான் நான் செய்தேனே தவிர யாருக்காகவும்  ஒருபோதும் நான் தகவலைத் திரட்டவில்லை,
நாங்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டபோதும், பிணையிலேயே விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தவறான தகவலாகும். நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று உண்மையைச் சொல்லக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான திரிவுபட்ட தகவலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாம் விடுதலையானாலும் இன்னும் மறைமுகமான அச்சுறுத்தல் தொடரவே செய்கின்றது" -  என்றார்.

ad

ad