புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014


தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி; பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்றும், இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜி.கே.மணி கூறினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று மதியம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. சார்பில் தர்மபுரியில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட உள்ளார். இதை அதிகாரபூர்வமாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வெளியிடுகிறேன். அவரை ஆதரித்து தர்மபுரியில் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்திற்கு இன்று(நேற்று) ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:–பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விட்டதா?
பதில்:–பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. உத்தேச பட்டியல் தான் வெளியாகியிருக்கிறது. சிக்கீரம் முடிந்து விடும்.
11–வது வேட்பாளரா? பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரா?
கேள்வி:–தொகுதி பங்கீடு முடியவில்லை என்று சொல்கிறீர்கள், ஆனால் தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டீர்களே?
பதில்:–நாங்கள் ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோமே. தற்போது 11–வது வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கேள்வி:–பா.ஜ.க. கூட்டணியில் தானே இருக்கிறீர்கள்?
பதில்:–10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பு நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. தற்போது பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எனவே தர்மபுரியில் வேட்பாளரை அறிவிப்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஏற்கனவே தெரிவித்த பிறகே, வேட்பாளரை அறிவித்து இருக்கிறோம். இதில் குழப்பம் எதுவும் இல்லை.
விஜயகாந்த் பிரசாரத்தில் பங்கேற்பா?
கேள்வி:–தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். அந்த கூட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொள்வார்களா?
பதில்:–நாங்கள் தர்மபுரியில் பா.ம.க. சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்துவதால், அங்கு தான் இருப்போம்.
கேள்வி:–தொகுதி பங்கீட்டில் சில தொகுதிகளில் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:–எல்லாம் பேசி தீர்த்துக்கொள்வோம். அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். உங்களின் எல்லாவிதமான கேள்விகளுக்கும் டாக்டர் ராமதாஸ் விரைவில் விரிவாக பதில் அளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மாநில துணை பொதுச்செயலாளர் ரவிராஜ், மாவட்ட செயலாளர் எம்.கே.குணா, சென்னை மாநகர அமைப்பாளர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ad

ad