புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

உளவுப்பிரிவின் தீவிர கண்காணிப்பில் சந்திரிகா
தன்மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.


2005 ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக இருந்து பதவி விலகியது முதல் தன் மீது இப்படியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காணிப்பின் காரணமாக தன்னைச் சந்தித்து விட்டு திரும்பும் தனது நண்பர்கள் சிலர் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு எதிரான இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு புறம்பானது மற்றும் ஒரு அடிப்படை உரிமை மீறல் என்றும் அவர் கூறியுள்ளார்.

தன் மீதான இந்த சட்டவிரோதக் கண்காணிப்பை நிறுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிடுமாறும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களது இந்தக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தனக்கு பெரும் அசௌகர்யத்தை ஏற்படுத்துவதுடன், தனது சொந்த பாதுகாப்புக்கு குந்தகமாக அமையலாம் என்றும் சந்திரிகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது சகோதரரான, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியோரின் கீழ் நேரடியாக இயங்கும் உளவுப் பிரிவினரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ad

ad