புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2014

வரலாறு காணாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஐயாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாம். அதிசயமான வளர்ச்சி இது.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் இல்லை ஆனால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது,

நாட்டின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது, சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் இப்போது பணமில்லை.
எல்லா விடயங்களுக்கும் வரியை அறவீடு செய்து அதன் மூலம் ஆட்சி நடாத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக ரொட்டியின் விலை எவ்வாறு இருந்ததோ அதே நிலைமை காணப்படுகின்றது.
எனினும், இலங்கையில் எல்லா பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஒரு கிலோ பால் இறக்குமதி செய்யும் போது விலை 350 ரூபா, அதற்கான வரி 400 ரூபாவாகும்.
வரி அறவீடுகளுக்கு மேலதிகமாக அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.
இன்று இவ்வளவு ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென உத்தரவிட்டே பொலிஸார் வீதிகளில் இறக்கப்படுகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவா யோசனை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்: வங்கியாளர்கள்
ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனை, இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கையின் பொருளதாரத் துறையினர் முன்னணியாளர்களின் கருத்துக்கள், பெரும்பாலும் ஜெனிவாவின் யோசனை இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அமைந்துள்ளன.
சம்பத் வங்கியின் தலைவர் தம்மிக்க பெரேரா- ஜெனிவா தீர்மானம் எவ்வாறு அமைந்திருந்தாலும் இலங்கையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி சூழ்நிலை, வர்த்தகத்துறைக்கும் வியாபிக்கப்பட்டு தொழில் வாய்ப்புக்களும் புதிய தொழில்களும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்போதே இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும்.  அதேநேரம் எந்த ஒரு சவாலையும் சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
லாப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கே எச் வேகப்பிட்டிய, ஜெனிவா பிரேரணையின் வெளிப்பாட்டினால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார தடை என்ற விடயம் இலங்கைக்கு ஏற்படுத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியை இதங்கு காரணமாக கூறமுடியும் என்று வேகப்பிட்டிய கூறியுள்ளார்.
வளர்ச்சியடைந்த நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை பற்றி பேசுகின்றன. எனினும் அந்த நாடுகள் காலனித்துவ ஆட்சியின் போது மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை என்று வேகப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
சொப்லொஜிக் குழுமத்தின் தலைவர், அசோக் பத்திரகே- இலங்கையில் சிறுபான்மையினருக்கு சம வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கும் பொருளாதாரத்துறையில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரையில் அதன் பொருளாதார மேம்பாட்டுக்கு அனைத்து நாடுகளின் உதவிகளும் அவசியமானது என்றும் பத்திரகே குறிப்பிட்டுள்ளார். தேசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையாளர் ராஜேந்திரன் தேகராஜா- இலங்கையை பொறுத்தவரையில் ஜெனிவா பிரேரணை நிறைவேற்றம் இலங்கையின் பொருளாதாரத்தில் செல்வாக்கை செலுத்தும்.
எனினும் இலங்கையில் உற்பத்தி மற்றும் முதலீட்டாளர்கள் தொடர்பில் அதீத செயற்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் தனியார் துறையினரின் பங்கு முக்கியமாக அமையவேண்டும் என்றும் தேகராஜா தெரிவித்துள்ளார்.
எல்ஓஎல்சீயின் மேலாளர் ஸ்ரீயான் குருசிங்க- 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்துறை முன்னேற்றத்தில் உரிய முனைப்பை காட்டவில்லை.
ஜெனீவா பிரேரணை நிறைவேற்றம் என்ற விடயத்தை பார்;தால் அது இலங்கையில் இன்று முன்னிலைப்பெற்றுள்ள சுற்றுலா துறையில் பாதிப்பு ஏற்படும். அதனை தவிர்க்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

ad

ad