புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

ஞானதேசிகனுக்கு தெரியாமலே வேட்பாளர் மாற்றம் 
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய காரிய கமிட்டி உறுப்பினர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்தியச் செயலாளர் சுபாங்கர் சர்க்கார்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. கோபிநாத் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டது.
போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் மனுக்களைப் பரிசீலனை செய்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 1 முதல் 4 பேர் கொண்ட பட்டியலை சோனியா காந்தியிடம் இக்குழு அளித்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக தில்லியில் முகாமிட்டிருந்த ஞானதேசிகன், கோபிநாத் ஆகியோர் வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டு வியாழக்கிழமை (மார்ச் 20) காலை சென்னை திரும்பினார். இரவு 10.30 மணிக்கு 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பல தொகுதிகளுக்கு கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த ஞானதேசிகன் அதிர்ச்சி அடைந்தார். சிதம்பரம் (தனி) தொகுதிக்கு மணிரத்தினம் பெயர் ஐவர் குழுவால் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்கு ப. சிதம்பரம் ஆதரவாளரான வள்ளல்பெருமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதுபோல, சில தொகுதிகளில் கடைசி நேரத்தில் தங்கபாலு ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த ஞானதேசிகன், குலாம்நபி ஆசாத்திடம் தொலைபேசியில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு ஏற்கெனவே முடிவு செய்தவர்களையே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான ஞானதேசிகனுக்கு தெரியாமல் வேட்பாளர்கள் மாற்றப்பட்டிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர் (தனி), கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு தான் பரிந்துரைத்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க ஞானதேசிகன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ad

ad