புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி சந்திப்பு அரசியலில் திடீர் பரபரப்பு

தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்ட நிலையில், கவிஞர் கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழியுடன் சந்திப்பு

முன்னாள் மத்திய மந்திரியும், மதுரை தொகுதி எம்.பி.யுமான மு.க.அழகிரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து, கருத்து தெரிவித்த மு.க.அழகிரி, ‘‘என்னை நீக்கியது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன்’’ என்றும் தடாலடியாக கூறினார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை கோபாலபுரம் இல்லம் வந்த மு.க.அழகிரி, தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து பேசிவிட்டு சென்றார். அதனைத் தொடர்ந்து, சென்னையிலேயே தங்கி இருந்த அவர், நேற்று சி.ஐ.டி. நகரில் உள்ள கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அதன்பிறகு, மு.க.அழகிரி புறப்பட்டு சென்றார். அவர் புறப்பட்ட சற்று நேரத்தில், கவிஞர் கனிமொழி எம்.பி., கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது, மு.க.அழகிரி கூறிய தகவல்களை அவர் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.
தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், கவிஞர் கனிமொழி எம்.பி.யை மு.க.அழகிரி சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கவிஞர் கனிமொழி எம்.பி.யை சந்தித்தது குறித்து மு.க.அழகிரி எம்.பி.  நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மு.க.அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:-
அரசியல் பேச்சா?
கேள்வி:- கவிஞர் கனிமொழி எம்.பி.யை வீடு சென்று சந்தித்துள்ளீர்கள். அதில் எதுவும் முக்கியத்துவம் உண்டா?.
பதில்:- உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கனிமொழி சிகிச்சை பெற்றபோது, என்னால் அவரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை. அதனால், அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வந்தேன். கனிமொழியை நான் நேரிலும், தொலைபேசி மூலமும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவேன். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
கேள்வி:- கனிமொழியுடன் அரசியல் பற்றி எதுவும் பேசினீர்களா?.
பதில்:- அரசியல் எதுவும் பேசவில்லை.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

ad

ad