புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

 


பிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,: மகளிர் அமைப்பு கண்டனம்
உத்தர பிரதேசத்தில் மீரட் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். தனது தொகுதி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது நக்மாவிடம், ஹாபுர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார்.
பொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து,
கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தமிட்டார். எம்.எல்.ஏ., வின் செயலால் அதிர்ச்சி அடைந்த நக்மா, அவரின் கையை உதறிவிட்டு, வேகமாக நடந்து சென்று பிரசார வேனில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் நக்மாவின் முகம் வாடியது.


எனினும், இந்த விவகாரம் குறித்து, நக்மா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், எம்.எல்.ஏ. காஜ்ராஜ் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad