செவ்வாய், ஏப்ரல் 08, 2014

புலிகளின் நிதியில் வாங்கிய 'ட்றோலர்' படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சாரதியாகப் பணியாற்றிய பின்னர், நாட்டை விட்டுத் தப்பியோடிய ஒருவரினால் அனுப்பப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 'ட்றோலர்' படகு ஒன்றை 05 சந்தேக நபர்களுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைப்ற்றியுள்ளனர் என கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த 'ட்றோலர்'  படகு பிரபாகரனின் ஒரு சகோதரரின் கணக்கிலிருந்து பணம் அனுப்பப்பட்டு அந்தப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதுடன், அது பிரபாகரனின் மூத்த சகோதரனின் பெயரில் பதியப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
நேற்று முன்தினம் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை முனையில் கடலுக்குச் சென்று விட்டுத் திரும்பிய  05 மீனவர்களை கடற்கரையில் காத்து நின்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர் என்பது தெரிந்ததே.
அவர்கள் தொழிலுக்குச் சென்ற 'ட்றோலர்'  படகு குறித்தே இவ்வாறு கொழும்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.