செவ்வாய், ஏப்ரல் 08, 2014

வாழ்வாதாரம் மேம்பட வீதியை சீர்செய்து தாருங்கள்; ரவிகரனிடம் ஒட்டுசுட்டான் மக்கள் கோரிக்கை


ஒட்டுசுட்டான் கூளாமுடிறிப்பு பகுதியில் 126 ஏக்கர் அளவிலான விவசாய நிலம் பயன்படுத்த முடியாமல் இருப்பதனால் 135 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ம
க்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே பயிற்செய்கையினை மேற்கொள்வதற்கு பாதையினை சீர்செய்து தருமாறு அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரவிகரனிடம் கேட்டபோது,

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கூளாமுறிப்பு பகுதியில் சமீபத்தில் நடந்த மக்கள் குறை கேள் சந்திப்பில் கூளாமுறிப்பு கமப்பாதையை சீர் செய்து தருமாறு மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு வருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட பெருவெள்ளப்பெருக்கினால் குறித்த பாதையின் சுமார் 150 மீற்றர் தூரமான பகுதி முழுமையாக நீருடன் அள்ளுண்டுள்ளது.

எனினும் இதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட பலரிடம் இது தொடர்பில் அறிவித்தும்  நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ப்பட்டவில்லை என்று மக்கள் வேதனையுடன் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து அப்பகுதி மக்கள், கிராம அலுவலர் ஆனந்தராஜா மற்றும் விவசாய திணைக்கள பிரதிநிதிகள் ஆகியோருடன் வடக்குமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பயன்படுத்தப்படாது இருக்கும் நிலங்களையும் நேரடியாக சென்றுபார்வையிட்டுள்ளார்.

இந்தநிலையில் பயிற்செய்கையினை மேற்கொண்டு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் அதிகரிக்க குறித்த பாதையினை சீரமைக்க  துறைசார் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன் மிகவிரைவில் பயிற்செய்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.