புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014






தென்சென்னையில் 15-க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்காக இரட்டை இலைக்கே வாக்களித்துப் பழக்கப்பட்டு விட்ட மீனவ பெண்கள், ""எப்பவுமே நாங்க ரெட்டை இலைதாங்க. எம்.ஜி.ஆருக்காக இந்த நன்றிக் கடன்'' என்று சொல்லிக் கொண்டே நமது சர்வே படிவத்தில் வாக்களித்தனர். மீனவ குப்பங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி ஏரியாவாசிகள், ""சென்னையின் மொத்த கழிவுகளையும் இங்குள்ள குப்பைக் கிடங்கில் மாநகராட்சி கொட்டுகிறது. இதற்கொரு தீர்வே கிடைக்கலை. எந்த அரசியல்வாதியும் கண்டுக்க மாட்டேங் குறாங்க. எங்க கோபம் தேர்தல்ல எதிரொலிக்கும்'' என ஆவேசப்பட்டார்கள்.

விருகம்பாக்கம் தனியார் நிறுவன அப்பார்ட் மெண்ட்வாசிகளிடம் சர்வே வுக்காக அணுகியபோது, ""இந்த முறை யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாதுன்னுதான் யோசிக்கிறோம். காங்கிரசை துரத்த வேண்டும்ங்கிறது எங்க எண்ணம்'' என்றனர்.


தொகுதி முழுக்க பல இடங்களில் நாம் சந்தித்த ஆட்டோ-ரிக்ஷா தொழிலாளிகள், ""மாசத்துக்கு ரெண்டு தரம் பெட்ரோல் விலை ஏறிடுது. ஆனா, அதுக் கேற்ப மக்களிடம் கட்டணம் வசூலிக்க முடியறதில்லே. இதுக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சிதான். இந்த முறை பா.ஜ.க.தான் சார் ஆட்சிக்கு வரணும்'' என்றனர். அதேசமயம், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களில் இருக்கும் தொழிலாளர்களிடமோ, ""அரசியல் சார்ந்தே முடிவெடுக்க வேண்டியதிருக்கு. எங்களை அவமானப்படுத்திய அ.தி. மு.க.வை பழிவாங்க தி.மு.க.வை ஆதரிப் போம்'' என்கிற அரசியல் எதிரொலித்தது.

கூவம் கரையோரத்து மக்கள் குடி யேறியிருக்கும் கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிவாசிகளின் கோபம் ஆட்சியாளர்கள் மீது ஏகத்துக்கும் வீசுகிறது. ""சிட்டிக்குள்ளே இருந்த எங்களை தூக்கி இங்கே போட்டுட்டாங்க. சமூக விரோதிகளின் கூடாரமா போய்டுச்சு. போலீஸ் மாமூலும் கட்டப்பஞ்சாயத்தும் இங்கே அதிகம். கவர்மெண்ட் எதுவும் எங்களுக்காக செய்யலைங்க'' என்று ஆதங்கப்பட்டனர்.

தொகுதியிலுள்ள முஸ்லிம்களை அணுகியபோது, பா.ஜ.க. மீதான கோபத் தையும் அ.தி.மு.க. மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தியவர்கள், ""இந்த முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. ரெண்டையுமே ஒரே தட்டில் வைத்துதான் பார்க்க வேண்டியதிருக்கு'' என்றனர்.

""பத்து வருட காங்கிரஸ் ஆட்சியில் தனி மனிதனின் சேமிப்பு அதிகரிக்கவே இல்லை. விலைவாசியை கட்டுக்குள் வைக்கத் தெரியாத அரசு, எதற்கு நாட்டை ஆளணும்?'' என்கிறார் மந்தைவெளியில் நாம் சந்தித்த உயர் வகுப்பினரான நாராயணன். ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியரான நிர்மலா, ""மத்தியில் நம் மாநில அரசின் பிடி இருக்க வேண்டும். எப்படியும் பா.ஜ.க.வை ஜெயலலிதா ஆதரிப்பார். அதற்காக ஜெ.வை ஆதரிக்கலாம்னு தோணுது'' என்கிறார்.

வேளச்சேரி காந்திநகர் மக்களோ, ""வாங்குற சம்பளத்துல பாதி வாடகையாகவும், மீதி குடும்பம் நடத்தவும் சரியாய்டுதுங்க. அந்தளவுக்கு விலைவாசி ஏறிடுச்சு. விலைவாசியை ஜெயலலிதா குறைச்சிருக்கணும். அதபத்தி அவங்க அக்கறை காட்டலை. மலிவு விலை காய்கறி கடைன்னு ஒண்ணு போட்டாங்க. அங்கேயும் விலை மலிவுன்னு சொல்ல முடியாது'' என்று ஆதங்கப் பட்டார்கள்.

தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருக்கு என்றே சொல்லலாம். படித்து வேலையிலுள்ள இளைஞர்கள், ""இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. இந்தத் தேர்தலில் வேட்பாளரை பற்றி அறிந்து வாக்களிக்க முடிவு செய்திருக்கிறேன். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரென்றே தெரியவில்லை. பா.ஜ.க. இல.கணேசனை பற்றி நல்லவிதமான தகவல்களையே நாங்கள் அறிந்துள்ளோம்'' என்கின்றனர்.

அம்மா உணவகமும் விலையில்லா மிக்ஸி -கிரைண்டரும் ஏழை மற்றும் லோயர் மிடில் கிளாஸ் மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான மனநிலையை எதிரொலிக்கவே செய்தது.

தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சர்வே எடுத்தபோது, ""பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்தல், ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்பட 8 முக்கிய கோரிக்கைகள் எங்களிடம் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அதுபற்றி அக்கறை காட்டவில்லை. இதுகுறித்து பலமுறை நினைவுபடுத்தியும் எங்களை அலட்சியப்படுத்துகிறது இந்த அரசு. விரக்தியும், வெறுமையும் எங்களிடம் இருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் எதிரொலிக்கும்'' என்றனர்.

தொகுதியில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தேசிய கட்சிகளை விட மாநில கட்சிகளுக்கே முன்னுரிமை தருகிறார்கள் என்பதையும் உயர் வகுப்பு மற்றும் படித்த இளைஞர்களிடம் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளில் யாரை ஆதரிப்பது என்கிற மனநிலை இருப்பதையும் அவர்களிடம் நாம் பேசியபோது வெளிப் படுத்தினர்.

கருத்து கணிப்பிற்காக மக்களை நாம் சந்தித்தபோது, ""ஓட்டுக்குப் பணம் தருவீர் களா? எவ்வளவு தருவீங்க?'' என்று கேட்கும் மனநிலை தொகுதி முழுவதும் ஏழை மக்களிடம் இருக்கிறது.

ad

ad