புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா ஆசாமி கைது
கோவை, ஆவராம்பாளையம் துரைசாமி லே–அவுட்டை சேர்ந்தவர் சந்தியா (வயது-16 பெண்ணின்  பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமி சந்தியா மாலை 6 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து சந்தியாவின் பெற்றோர், மாணவி படிக்கும் பள்ளியிலும், அவரது நண்பர்களிடமும் விசாரித்தனர். ஆனால் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமி கடத்தப்பட்டதாக பீளமேடு பகுதி பரபரப்புக்குள்ளானது.

சிறுமி சந்தியாவின் உறவினர்களும், ஆவராம்பாளையம், பீளமேடு பகுதியை சேர்ந்த பொது மக்களும் ஆளுக்கொரு திசையில் சிறுமி சந்தியாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


அப்போது சந்தியா ஆவராம்பாளையம் பகுதியில் உள்ள தோழி ஒருவரின் வீட்டு முன்பு மாலை நின்று கொண்டு இருந்ததாக தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் சந்தியாவின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு சிறுமியை தேடினர்.


ஆனால் அங்கு சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே சிறுமி சந்தியா ஒரு காரில் ஏறி சென்றதாக தகவல் கிடைத்தது. அந்த காரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரின் எண்ணும், காரில் வந்தவர் குறித்த தகவலும் கிடைத்தது.


பொதுமக்கள் விசாரிக்கும் போது காரில் வந்தது கேரள மாநிலத்தை சேர்ந்த வர்க்கீஸ் (வயது-60) என்பதும் தெரிய வந்தது. வர்க்கீஸ் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். தொழில் விசயமாக ஆவராம் பாளையம் பகுதிக்கு அடிக்கடி வர்க்கீஸ் வருவதும் தெரிய வந்தது.


இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வர்க்கீசின் காரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய தேடுதல் வேட்டை இரவு 11.30 மணி வரை நீடித்தது. ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் உறவினர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் 12 மணியளவில் ஆவராம்பாளையம் பகுதியில் வர்க்கீஸ் கார் நிற்கும் விவரம் தெரியவந்தது.


அங்கு பொதுமக்கள் படையெடுத்து சென்றனர். சாலையின் ஓரத்தில் காரில் வர்க்கீஸ் மட்டும் அமர்ந்து இருந்தார். அவரிடம் பொது மக்கள் சிறுமி சந்தியா குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு எதுவும் தெரியாது என்று வர்க்கீஸ் சமாளித்தார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் வர்க்கீசின் காரை சல்லடை போட்டு தேடினர். அப்போது காரின் டிக்கியில் சிறுமி சந்தியா மயக்க நிலையில் இருந்தார்.


இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வர்க்கீசுக்கு தர்மஅடி கொடுத்து சிறுமி சந்தியாவை மீட்டனர். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவலறிந்ததும் பீளமே போலீசார் விரைந்து வந்து வர்க்கீசை கைது செய்தனர்.காரை பறிமுதல் செய்த போலீசார் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது அவர் போலீசாரிடம் கூறியதாவது:–


பள்ளியில் தேர்வு நடப்பதால் பள்ளிக்கு செல்ல பயமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் பீளமேடு மற்றும் ஆவராம்பாளையம் பகுதியில் சுற்றி வந்தேன். நேற்றும் பள்ளிக்கு செல்லவில்லை.


பள்ளி முடியும் நேரத்தில் வழக்கமாக வீட்டுக்கு செல்லும் நேரத்தில் செல்வதற்காக ஆவராம்பாளையம் பகுதியில் ரோட்டில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது அந்த பகுதியில் வர்க்கீஸ் காரில் வந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பகுதிக்கு அடிக்கடி வருவார். அவரை தெரியும் என்பதால் அவரிடம் பேசினேன்.


என்னை வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதாக கூறி என்னை காரில் ஏற்றினார். பின்னர் என்னை காரில் வைத்துக் கொண்டு பீளமேடு பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அப்போது என்னிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்றார்.


இதனால் அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டேன். இதனால் என்னை தாக்கிய அவர் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்த நான் சத்தம் போடவில்லை. என்னிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சியில் நான் லேசாக மயங்கினேன்.


வர்க்கீஸ் என்னை காரின் டிக்கியில் மறைத்து வைத்தார். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை என அந்த சிறுமி கூறியுள்ளார்.


வர்க்கீசிடம் போலீசார் விசாரித்தபோது, ‘‘சிறுமியை காரில் கடத்தி சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டேன். அப்போது அவரது உறவினர்கள் என்னை தேடுவதாக அறிந்தேன். இதனால் பயந்த நான் சிறுமியை காரின் டிக்கிக்குள் மறைத்து வைத்தேன்.


அதன்பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது போது, மாணவியை தேடிக்கொண்டு வந்த பொதுமக்களிடம் சிக்கிவிட்டேன்’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி சந்தியா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

ad

ad