புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014

கோவையில் இன்று (16ஆம் தேதி) பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தார். பின்னர் மாலை 4 மணியளவில்
கிருஷ்ணகிரியில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து சேலம் வந்த மோடி, தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் மோடியுடன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் கலந்து கொண்டார்.

இதையடுத்து, தனி விமானம் மூலம் மோடி கோவை புறப்பட்டுச் சென்றார். சுமார் 6.50 மணிக்கு கோவை சென்ற அவர், லீமெரிடியன் ஓட்டலில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். இதையடுத்து, ஏற்கனவே அதே ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜய், நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
மோடியுடன் சந்திப்பு குறித்து விஜய் கூறுகையில், ''அரசியல் சார்பு இல்லாமல் என்னை, மோடி சந்திக்க விரும்பியது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

முன்னதாக, "நாட்டின் மிகப்பெரிய தலைவரான நரேந்திர மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது விருப்பத்தை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன். முழுக்க முழுக்க இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்புக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என நடிகர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

ad

ad