புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி 

வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு வருடங்களிற்கு மேலான கடினமான உழைப்பினாலேயே முடிந்தது என இராணுவத் தளபதி பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் முல்லைத்தீவு விஜயத்தையொட்டியே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள ருவான் வணிகசூரிய, வன்னிக் மக்களிற்கு குறிப்பாக கேப்பாப்புலவு மக்களிற்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோத்தபாய ராஜபக்ச அங்கு சென்றிருந்த நேரத்திலே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1373ன் கீழான இந்த தடைக்கான உத்தரவு இலங்கை அரசால் வர்த்தமானிப் பிரகடனம் மூலம் இன்று வெளியிடலாம் என கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தடையின் மூலம் மேற்படி அமைப்புக்களுடன் இலங்கையிலுள்ளோர் தொடர்பு கொள்வதற்கும், மேற்படி அமைப்பிலுள்ளோர்கள் இலங்கையில் உள்ள சொத்துக்களை பரிமாற முடியாமை, பணப்பங்களிப்பு செய்ய முடியாமை, அரசியலிலில் ஈடுபடுதல் தவிர்க்கப்படுதல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம் என சிறீலங்கா அரசு நம்புகிறது.
இந்தத் தடைக்கான ஆதாரங்களை விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகம் கைப்பற்றப்பட்ட போது பெறப்பட்டவை என்றும் புதுக்குடியிருப்பிலிருந்த அந்தச் செயலகத்தை விட்டு புலிகள் அவசரமாக வெளியேறிய போது தங்களிடமிருந்த ஆவணங்கள், வெளிநாட்டு செயற்பாடுகள் குறித்த ஆதாரங்கள், கணனிகள் என்பவற்றை புலிகள் கைவிட்டுச் சென்ற போது கைப்பற்றப்பட்டதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
மறுபுறமாக இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள், பிரமுகர்கள், தமிழ் மக்கள் போன்றோர் இந்த 16 அமைப்புகளின் மூலம் எந்த உதவியையும் பெறுவதை இந்தத் தடைச் சட்டமூலம் கண்காணிக்கும் எனத் தெரியவருகிறது.

ad

ad