ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

இலங்கை-இந்திய மீனவ 2ம் கட்ட பேச்சு விரைவில் 
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு ஒன்றினை பெறும் நோக்குடன் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தை  தொடர்பில் கலந்து கொள்வதற்காக 30பேர்
அடங்கிய இந்திய மீனவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த தகவலை இன்றைய தினம் வெளியிட்டார் இலங்கை-இந்திய மீனவ சம்மேளனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் எஸ் பி அந்தோனிமுத்து.
 
 
இதேவேளை இலங்கை இந்திய மீனவர்களின் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இலங்கையில் நடைபெறவிருத்த நிலையில் அவை பலதடவைகள் பிற்போடப்பட்டமை ஏற்கனவே தெரிந்ததே.
 
எனினும் இம்மாதம் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சு வார்த்தை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ் பி அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார்.