புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014

2ஜி வழக்கில் ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்பட
19 பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சிஏஜி குற்றம்சாட்டியிருந்தது. மேலும், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது.

டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி
தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி, ஸ்வான் டெலிகாம் தலைவர் ஷாகித் பல்வா உள்பட 19 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

குற்றப்பத்திரிகை வரும் 30ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

ad

ad