புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

இலங்கை - இந்தியா ன்று பலப்பரீட்சை-வெற்றி பெற்றால் 20 கோடி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றுள்ளன.இன்று நடைபெறும் பலப்பரீட்சையில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அவ்வணிக்கு இருபது கோடி ரூபாய் வழங்கப் படுமென்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இருபது - 20 உலகக் கிண்ண வரலாற்றில் முதலிரு தொடர் களைத் தொடர்ந்து இரு ஆசிய நாடுகள் மீண்டும் இம்முறை கிண்ணத்துக்காக இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இலங்கையும் 2ஆவது முறையாக இறுதிப்போட்டியை உறுதி செய்துள்ள முன்னாள் சம்பியன் இந்தியாவும் இன்று மோதும் தீர்க்கமான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.சி.சி யின் 5ஆவது உலக இருபது -20 கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. 16 அணிகள் களமிறங்கிய இத்தொடரில் இறுதி 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய பிரதான சுற்று நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொடரின் 2ஆவது அரையிறுதியில் இந்திய - தென்னாபிரிக்க அணிகள் மோதின. தொடரின் முதல் அரையிறுதியில் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெளியேற்றிய இலங்கை அணி ஏற்கனவே இறுதிப் போட்டியை உறுதி செய்துள்ள நிலையில் கடந்த வெள்ளியன்று 2ஆவது அரையிறுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
9 ஓட்டங்களைப் பெறுவதற்குள் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்து ஆரம்பம் தடுமாறிய தென்னாபிரிக்க அணிக்கு அரைச்சதம் அடித்த அணித்தலைவர் டு பிளஷிஸ் (58), ஹஸிம் அம்லா (22) மற்றும் ஆட்டமிழப்பின்றி 45 ஓட்டங்களைப்பெற்ற டுமினி, டேவிட் மில்லர் (23) ஆகியோர் நம்பிக்கை அளித்தனர்.
இதனையடுத்து 173 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திய அணி, விராட் கோஹ்லியின் அதிரடியில், 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ad

ad