புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2014


திருச்சியில் பதற்றமான 214 வாக்கு சாவடிகளில் வெப் காமிரா
திருச்சி மாவட்ட கலெக்டரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜெயஸ்ரீ முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு
உள்ள 2,319 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி குடிநீர், கழிவறை, மாற்று திறனாளிகளுக்காக சாய்வுதளம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. 6 வாக்குச் சாவடிகளில் சாய்வு தளம் அமைக்க வழி இல்லாததால் மரத்தால் ஆன தற்காலிக சாய்வு தளங்கள் 23–ந்தேதி (இன்று) இரவு அமைக்கப்படும்.


திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு (பூத்சிலிப்) வீடு, வீடாக வினியோகம் செய்வது 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. திருச்சி மாநகர பகுதியில் 85 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் அருகில் உள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி இந்த தேர்தலில் வாக்குச்சாவடி மையங்கள் அருகில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள வாக்காளர் வசதி மையத்தில் பெற் றுக்கொள்ளலாம். இந்த மையத்தில் அகர வரிசைப்படி வாக்காளர்களின் பெயர் பட்டியலும் வைக்கப்பட்டு இருக்கும். இந்த மையம் வாக்காளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
தேர்தல் பணியில் திருச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 410 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு ஏற்கனவே 2 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 3-வது கட்ட பயிற்சி வகுப்புகள் 23–ந்தேதி(இன்று) நடத்தப்படும். அன்றைய தினம் மாலை அவர்களுக்கு தேர்தல் பணி செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படும்.
அப்போது பயிற்சி வகுப்பு நடக்கும் இடங்களில் அவர்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதற்கான தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப் படும். அங்கு அவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம்.
திருச்சி மாவட்டத்தில் 214 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் ‘வெப் கேமரா‘ பொருத்தி இணையதளம் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இணையதள வசதி இல்லாத வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிப்பதற்காக 240 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 244 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் வெளி இடங்களில் இருந்து வந்துள்ள துணை ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆகியோரும் அடங்குவார்கள். பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலா இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். மொத்தம் 5 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய பெல் நிறுவனத்தின் பொறியாளர் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் தயார் நிலையில் இருப்பார். தேவைப்பட்டால் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனடியாக மாற்றம் செய்யப்படும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இடைவிடாது வாக்குப் பதிவு நடைபெறும். கடந்த தேர்தல்களை விட ஒரு மணி நேரம் முன்னதாக இந்த முறை வாக்குப்பதிவு தொடங்குவதால் காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்படும். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக் கப்பட்ட இடங்களுக்கு முந்தைய நாள் இரவே சென்று தங்கி கொள்ள வேண்டும்’’என்று கூறினார்.

ad

ad