புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014


முதல்வர், அமைச்சர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக் கூடாது: பிரவீண்குமார்
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,


முதல்வர், அமைச்சர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக் கூடாது. முதல்வர், அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு வழக்கம்போல் செல்லலாம். புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடக் கூடாது. தேர்தல் விதிமீறல் பற்றிய 2,518 வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

வேட்பாளர்கள் செலவு கணக்குகளை ஜூன் 15ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். செலவு கணக்கை சரிபார்க்க ஜூன் 8ஆம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருவார்கள். விதிமீறல்கள் நிருபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. வாக்கு எண்ணிக்கையின் போது 42 மையங்களும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.

ad

ad