புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2014

விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை விழுந்தது: மீட்பு பணி தீவிரம்!விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தியாகதுருகம் அருகே உள்ள பள்ளகசேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை ஆகியோரின் 3 வயது மகள் மதுமிதா. இன்று காலை 9 மணிக்கு ராமச்சந்திரன் தனது மகள் மதுமிதாவுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, தோட்டத்தில் மதுமிதா விளையாட சென்றுவிட்டார். ராமச்சந்திரன் தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

மூடப்படாத ஆழ்துளை கிணறு
இந்நிலையில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மதுமிதா, மூடப்படாத நிலையில் இருந்த 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். மகளின் அலறல் சத்தம் கேட்டு ராமச்சந்திரன் ஓடிவந்துள்ளார். மகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்படுகிறது
தீயணைப்பு வீரர்கள் 5 வண்டிகளில் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதுவரை 30 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது 30 அடி பள்ளத்தின் பக்கவாட்டில் துளை போடும் பணி  நடைபெற்று வருகிறது.

2 சிலிண்டர்களில் ஆக்சிஜன் செலுத்தம்
குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்படாமல் இருக்க 2 சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

25 அடியில் குழந்தை இருப்பதாகவும், குழந்தையின் அசைவு தெரிவதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் குழந்தையை மீட்டுவிடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ரோபோட்டிக் மூலம் மீட்பு நடவடிக்கை
திருச்சி மற்றும் மதுரையில் வந்துள்ள மீட்புக்குழுவினர் ரோபோட்டிக் இயந்திரம் மூலம் குழந்தையை மீட்டுவிடுவோம் என தெரிவித்துள்ளனர். 

ad

ad