புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014





சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஓட்டு வேட்டை இன்று முதல் 3 நாள் பிரசாரம் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி 4-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தி.மு.க. வேட்பாளர் களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒருநாளைக்கு 2 தொகுதி என்ற கணக்கில் அவர் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொகுதிக்கு ஒருநாள் வீதம் பிரசாரத்தை வகுத்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். தற்போது பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கடைசிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர்.
சென்னையில்ஜெயலலிதா-கருணாநிதி
இன்று முதல் 21-ந் தேதி வரை சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இன்று (19-ந் தேதி) ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் ஜெயலலிதா, கோட்டூர்புரம், மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லூரி சுரங்கப்பாதை வழியாக சென்று நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பேசுகிறார். அதன்பின்னர், 4-வது பிரதான சாலை வழியாக செல்லும் அவர், பழவந்தாங்கலில் உள்ள ஆலந்தூர் தாலுகா அலுவலகம் அருகே பேசுகிறார். தொடர்ந்து, தில்லை கங்காநகர் வழியாக செல்லும் ஜெயலலிதா, ஆலந்தூர் நீதிமன்றம் அருகில் வாக்கு சேகரித்து பேசுகிறார்.
பின்னர், மத்திய சென்னை தொகுதியில், கிண்டி, அசோக் பில்லர், எம்.எம்.டி.ஏ. காலனி மெயின் ரோடு வழியாக செல்லும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரசாக் கார்டன் சந்திப்பில் பேசுகிறார். தொடர்ந்து, பூந்தமல்லி சாலை, நியூ ஆவடி சாலை, அயனாவரம் சாலை, கெல்லீஸ் பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மேம்பாலம், சூளை நெடுஞ்சாலை வழியாக செல்லும் அவர் சூளை தபால் நிலையம் அருகே பேசுகிறார்.
அதன்பின்னர், சைடன் ஆம்ஸ் சாலை, யானைகவுனி பாலம் வழியாக செல்லும் ஜெயலலிதா, வால்டாக்ஸ் சாலை சந்திப்பில் பேசுகிறார். தொடர்ந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்டிரல், அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக செல்லும் அவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் பேசுகிறார். பின்னர், நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்கிறார்.
வடசென்னை
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னை தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்படும் அவர், ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக சென்று திருவொற்றியூர் தேரடியில் பேசுகிறார். பின்னர், டோல்கேட், தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அவர் மணலி நெடுஞ்சாலை சந்திப்பில் பேசுகிறார்.
தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி இணைப்பு சாலை வழியாக செல்லும் ஜெயலலிதா, சத்தியமூர்த்தி நகரில் பேசுகிறார். பின்னர், எம்.கே.பி. நகர், மத்திய நிழற்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூர்த்திங்கர் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் ஜெயலலிதா பெரவள்ளூர் சந்திப்பில் பேசுகிறார். அதன்பின்னர், பெரம்பூர் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்கிறார்.
தென் சென்னை
21-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தென்சென்னை தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்படும் அவர், காந்தி சிலை, சாந்தோம் நெடுஞ்சாலை, எல்.பி. ரோடு வழியாக சென்று பெருங்குடியில் கந்தன்சாவடி காளியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பேசுகிறார். அதன்பின்னர், டைடல் பார்க், வேளச்சேரி ரோடு, பனகல் மாளிகை வழியாக சென்று ஐந்து விளக்கு பகுதியில் ஜெயலலிதா பேசுகிறார். தொடர்ந்து, ஜோன்ஸ் ரோடு, கே.கே.நகர் பகுதி வழியாக செல்லும் அவர் எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் (100 அடி ரோடு) அருகே பேசுகிறார்.
பின்னர், உதயம் தியேட்டர், அரங்கநாதன் சுரங்கப்பாலம், நியூ போக் ரோடு, முத்துரங்கன் சாலை வழியாக செல்லும் ஜெயலலிதா தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே பேசுகிறார். தொடர்ந்து, தேவர் சிலை, டி.டி.கே. சாலை வழியாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்கிறார்.
கருணாநிதி
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகில் பொதுக்கூட்ட பிரசார மேடை யில் பேசுகிறார். 20-ந் தேதி திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஆவடி பட்டாபிராம் சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இரவு 8 மணிக்கு வடசென்னை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ராயபுரம் சுழல்மெத்தை சாலையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார். 21-ந் தேதி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அண்ணாநகர், எம்.எம்.டி.ஏ. காலனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
பொதுக்கூட்டத்தில் நிறைவு செய்கிறார்
தேர்தல் பிரசாரத்திற்கான கடைசி நாளான 22-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன்படி அன்று காலை 9 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.நகர், 9.30 மணிக்கு திரு.வி.க.நகர் (பட்டாளம்), காலை 10 மணி- மத்திய சென்னை -வில்லிவாக்கம், அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகில், 10.30 மணி- தென்சென்னை- தியாகராயநகர், அசோக்நகர், புதூர், 11 மணிக்கு மத்திய சென்னை-ஆயிரம் விளக்கு, தாமஸ்ரோடு, ஆலையம்மன் கோவில் அருகில், 11.30 மணி- தென்சென்னை மைலாப்பூர் நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார்.
மாலை 4.30 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கம்-சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணா தெருவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

ad

ad