புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014


புத்தாண்டு கால விபத்துகளினால்

ஐந்து நாட்களில் 38 பேர் உயிரிழப்பு

* நாடு பூராவும் 417 சம்பவங்கள் பதிவு
* மதுபோதையில் வாகனம் ஓட்டிய 877 பேர் கைது

* மக்களுக்கு இடையூறு இன்றி கொண்டாட்டங்களை நடத்துமாறு பொலிஸார் கோரிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப் பகுதிக்குள் நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் அனர்த்தங்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடந்த 10ம் திகதி அதிகாலை 6.00 மணி தொடக்கம் நேற்று 15ம் திகதி அதிகாலை 6.00 மணி வரையிலான ஐந்து நாட்களில் மாத்திரம் 417 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி ஐந்து நாட்களுக்குள் மாத்திரம் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 877 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களை தவிர்க்கும் வகையிலான விசேட வேலைத்திட்டம் கடந்த 10ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பி க்கப்பட்டது. இதன்படி சட்ட ஒழுங்கு விதி முறைகளை மீறி, மது போதையில் வாகனங்களை செலுத்திய சாரதிகள் நாடு முழுவதிலும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பஸ் வண்டிகளின் சாரதிகள் 8 பேர், மோட்டார் சைக்கிள் செலுத்திய 473 பேரும், முச்சக்கர வண்டியை செலுத்திய 308 பேரும் ஏனைய வாகனங்களை செலுத்திய 88 பேரும் அடங்குவர்.
இதேவேளை புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் மாத்திரம் 24 மணி நேரத்திற்குள் 149 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 76 பேர், முச்சக்கர வண்டியை செலுத்திய 61 பேரும் ஏனைய வாகனங்களை செலுத்திய 12 பேரும் அடங்குவர்.

ad

ad