புதன், ஏப்ரல் 02, 2014

ஜெர்மனியில் லூப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தம்: 3800 விமானங்கள் ரத்து

ஜெர்மனியில் லூப்தான்சா விமானநிறுவன விமானிகனின் வேலைநிறுத்தம் காரணமாக 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து லூப்தான்சா விமானநிலைய செய்திதொடர்பாளர் பர்பரா கூறுகையில், இன்று (புதன்கிழமை)  900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3800 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளதால 425000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
நீண்ட காலமாக ,ருந்து ஊதிய உயர்வு பிரச்சனை காரணமாக (இன்று முதல்) புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று விமானிகள் யூனியன் அறிவித்துள்ளது.