புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

மனைவியை கூலிப்படை மூலம் கொன்றதாக கணவர் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது-38). கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவரது மனைவி கல்பனாஸ்ரீ (வயது-34). இந்த தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம்
நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


கல்பனாஸ்ரீ, மத்தூர் அருகேயுள்ள நடுப்பட்டியில் அரசுப் பள்ளியில் தையல் ஆசிரியராகப் பணியாற்றினார். கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, பள்ளிக்கு செல்வதாக வீட்டைவிட்டு சென்ற கல்பனாஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை.


இதுகுறித்து கணவர் கணேசன், பர்கூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி புகார் தெரிவித்தார். புகார் மனு மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். தொடர்ந்து அவர், உயர்நீதிமன்றத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.


உயர்நீதிமன்ற உத்தரவுபடி, பர்கூர் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்துவதை அறிந்த கணேசனின் நண்பர் பர்கூரைச் சேர்ந்த கோவிந்தராஜ், பர்கூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து, கோவிந்தராஜிடம் போலீஸார் விசாரித்ததில், கல்பனாஸ்ரீ-க்கும் கோவிந்தராஜிக்கும் ஏற்க்கனவே தகாத உறவு இருந்ததாகவும், மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் கணேசன், கோவிந்தராஜிடம் கூலிப்படை மூலம் மனைவியை கொலை செய்ய கூறி ரூ. ஒரு லட்சம் வழங்கியதும் தெரியவந்தது.


இதைதொடர்ந்து, கோவிந்தராஜ், பர்கூர் அருகேயுள்ள தபால்மேடு பகுதியைச் சேர்ந்த ரகு, சக்கிலிநத்தம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த மீசை ராஜா(எ)மூர்த்தி, பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து, கல்பனாஸ்ரீயை காரில் அழைத்துச் சென்று கொலை செய்ததும், பின்னர், சடலத்தை ஆந்திர மாநிலம், குப்பம் அருகேயுள்ள ஒரு மேம்பாலத்தின் அடியில் தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது.


இதையடுத்து, பர்கூர் போலீஸார் கோவிந்தராஜ், கணேசன், ஏகாம்பரம் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள ரகு, மீசை ராஜா (எ) மூர்த்தி, பெருமாள் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய 2 கார்களில் ஒரு காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


இந்த நிலையில், ஆசிரியை கல்பனாஸ்ரீ கொலை வழக்கு தொடர்பாக, நான்கு நாட்களுக்கு முன்பாக கோவிந்தராஜை பர்கூர் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரது மனைவியின் சார்பாக தனது கணவரை விடுவிக்குமாறு, கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி விஜயகுமார், பர்கூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை மாலை திடீர் ஆய்வு செய்தார்.


அப்போது, கோவிந்தராஜ், போலீஸாரின் விசாரணையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கோவிந்தராஜை முறைகேடாக காவலில் வைத்திருந்த  காவல் ஆய்வாளர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க சேலம் கோட்ட டி.ஐ.ஜி. அமல்ராஜுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ad

ad