புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2014

சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு (படங்கள்)திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.
மாலை 4 மணிக்கு சிறுவன் மீட்பு 


மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் (ரோபோ) மூலம் சிறுவன் மாலை 4 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டான்.

சிறுவன் மீட்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கருணாகரன், "மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் மூலம் சிறுவன் மீட்கப்பட்டான். தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புப்பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி" என்றார்.
பிற்பகல் 3.15 மணி நிலவரம்

சிறுவன் ஹர்சனின் அசைவுகள் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

பிற்பகல் 2.05 மணி நிலவரம்

10 நிமிடங்கள் வரை பெய்த சாரல் மழை தற்போது நின்றுவிட்டது. குழந்தை 15 அடி ஆழத்தில் இருப்பதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2 மணி நிலவரம்

தற்போது அந்த பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிற்பகல் 1 மணி நிலவரம்

நெல்லை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பத்ம குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவன் 10.15 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்து முக்கால் மணி நேரம் கழித்துதான் எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 12 அடி ஆழத்தில் சிறுவன் இருக்கிறான். பாறைகள் இருப்பதால் அதனை உடைக்க நேரம் ஆகிறது. அதிர்வுகள் ஏற்படாத வகையில் பாறைகள் மெதுவாக உடைக்கப்பட்டு வருகிறது. குழிக்குள் மணல் போகாதபடி கண்காணித்து வருகிறோம். குழந்தையுடன் பேசிக் கொண்டு வரும் தந்தை தைரியம் கொடுத்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் போர்வெல் போடப்பட்டுள்ளது. வறண்ட பகுதி என்பதால் தண்ணீர் வரவில்லை. இதனால் அவர்கள், குழாயை எடுத்து சென்று விட்டனர். குழாயை விட்டு சென்றுயிருந்தால் இப்படி விபத்துகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு விடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார். 
நண்பகல் 12.30 மணி  நிலவரம்

குழந்தையை மீட்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி விரைவாக நடந்து வருவதாகவும், 5 அடி தொலைவில் உள்ள சிறுவனை விரைவில் மீட்டு விடுவோம் என்றும் தீயணைப்பு துறை அதிகாரி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

நண்பகல் 12.15 மணி நிலவரம்

குழந்தையின் அழுகுரல் கேட்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவர் தனது மூன்றரை வயது மகன் ஹர்சனை அழைத்துக் கொண்டு இன்று தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, கணேசன் தோட்டத்தில் வேலை செய்ய சென்று விட்டார். மகன் ஹர்சன் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, தோட்டத்தில் மூடப்படாமல் இருந்த 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் ஹர்சன் தவறி விழுந்துவிட்டான்.

மகனின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த கணேசன், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்தனர்.
10 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு பொக்லைன் எந்திரம் மூலம் ஆழ்துளை கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டும் பணி விரைவாக நடந்து வருகிறது. தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளன. சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தில் 500 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad