புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் 
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 106 வேட்பாளர்கள்
மோதுகின்றனர். தேர்தல் ஆணையம் புதிதாக வெளியிட்டுள்ள செருப்பு சின்னத்தை பெறுவதற்கு சுயேச்சை வேட்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மற்றும் பரிசீலனை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்றும் இன்றும் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் தரப்பட்டது. இந்த கால அவகாசமும் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொருத்தவரையில் 39 தொகுதிகளுக்கும், 1261 பேர் மனு செய்திருந்தனர். இதில் 367 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது போக 294 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இதில் ஒரு சில சுயேச்சைகள் மட்டுமே வாபஸ்

பெற்றிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை யை பொருத்தவரை மத்திய சென்னை தொகுதிக்கு 43 பேர் மனு செய்திருந்தனர். இதில் 23 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து 20 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நேற்றும் இன்றும் மத்திய சென்னையை பொறுத்த வரை யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை. எனவே 20 பேர் இறுதி வேட்பாளராக களத்தில் இருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். பிற்பகல் 3மணிக்கு பின்னர் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தோதல் அதிகாரி அருண் சுந்தர் தயாளன் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதே நேரத்தில் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவியது. சுயேச்சைகளை பொருத்தவரை 87 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 சின்னங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
பச்சைமிளகாய், செருப்பு, பேனா நிப் ஆகியவை அந்த மூன்று சின்னங்கள் ஆகும். மத்திய சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட செருப்பு சின்னத்தை பெறுவதற்கு 2 சுயேச்சை வேட்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பின்னர் குலுக்கள் முறையில் அவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

ad

ad