புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: இன்று மாலை 6 மணியுடன் முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறக்கும் வகையில் நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

   பாஜக-தேமுதிக-மதிமுக-பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 845 பேர் தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.24) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மாலை 6 மணிக்குப் பிறகு எவரும் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்புக்கு தடை: தேர்தல் தொடர்பாக எந்தவித பொதுக்கூட்டங்களையோ அல்லது பேரணிகளையோ நடத்தக் கூடாது. பிரசாரம் குறித்து குறும்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யக் கூடாது. எஸ்.எம்.எஸ்., இணையதளம் ஆகியவற்றின் மூலம் பிரசாரம் செய்யவும், மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாக்களித்துவிட்டு வெளியே வருவோரிடம் கருத்துகளை கேட்டு வெளியிடப்படும் கணிப்புகளுக்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புபடுத்தி இசைநிகழ்ச்சிகள், நாடக நிகழ்ச்சிகள் உள்பட எந்தவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது. பிரசாரத்தை மையமாக வைத்து வாக்காளர்களைக் கவரும் வகையில் அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது
அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ad

ad