புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014


பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்
 
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும்
இதுபோன்ற வழக்கை முதல் முறையாக சந்திப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த 18.02.2014ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது.

இதன் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் ஒரு அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்டார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், கடந்த பிப்ரவரி 20ந் தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனுமீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27ந் தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 25ம் தேதிக்குள் தீர்ப்பு வழக்கப்படும் என்று கோவையில் ஒரு பொதுவிழாவில் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் 25.04.2014 வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரிக்கவும், 3 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதில் 7 விதமான விஷயங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகிறது என்று கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற வழக்கை முதல் முறையாக சந்திப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

7 விதமான விஷயங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகிறது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. 
அதில் குறிப்பாக, தூக்கு தண்டனை பெற்ற கைதிகளுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அந்த ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் அவர்கள் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதுதானா அல்லது அவர்கள் 14 ஆண்டுகள் காலம் சிறை தண்டனை அனுபவித்து இருந்தால், அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து விவாதிக்க வேண்டும். அப்படி விடுதலை செய்யும் பட்சத்தில் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து விரிவாக வாதங்கள் முடிக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ad

ad