புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

சாதனையாளர் சிறப்புரை நிகழ்வில் ஈழத்து விஞ்ஞானி கௌரவிப்பு 
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழக 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வும், உதயன் குழுமத்தின் ஆதரவுடன் இன்று பி.ப 3 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இதில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த ஈழத்து விஞ்ஞானி பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் விழா ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
 
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஜங்கரனேசன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 
நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஈழத்து விஞ்ஞானி சி.சிவானந்தன், மாணவர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடியதுடன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில்களை வழங்கினார்.
 
மேலும், தனது சிறுவயது பராயம் முதல் பௌதீகம் சார் விடயங்களில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவே புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க வழி செய்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
 
 
 
 
 

ad

ad