புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றுவரும் 7வது ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் 2வது ஆட்டத்தில் பெங்கள+ர் ரோயல் செலஞ் சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தால் வெற்றிபெற்று ள்ளது.
பெங்கள+ர் ரோயல் செலஞ்சர்ஸ்
அணியின் வீரர் யுவராஜ் சிங் 29 பந்துகளில் ஐந்து சிக்ஸ ர்கள் உள்ளடங்க 52 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு உதவியிருந்தார்.
'hர்ஜhவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டெல்லி அணியின் தலைவர் பீட்டர்சன் பங்கேற்க வில்லை. தினேஷ் கார்த்திக் தலைவராக செய ல்பட்டார். அதேபோல பெங்கள+ர் அணியில் அதி ரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதுகு வலி காரணமாக முதல் ஆட்டத்தில் ஆடவில்லை.
நாணயச் சுழற்சியில் பெற்றிபெற்ற பெங்கள+ர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்குத் தீர் மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அகர்வால் 6 ஓட்டங்களுடனும், முரளி விஜய் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தலைவர் தினேஷ் கார்த்திக் ஓட்டம் எதுவும் எடுக்காத நிலை யில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணி 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டு களை இழந்து தத்தளித்தது. அதன்பின் ஜோடி சேர் ந்த Nஜ.பி.டுமினி மற்றும் ரோஸ் டெய்லர் சிறப்பாக ஆடியிருந்தனர். டுமினி 48 பந்துகளில் 4 பவுண்ட ரிகள் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 67 ஓட்டங்க ளைக் குவித்தார். அவருடன் ஜோடிசேர்ந்தாடிய டெய்லர் 43 ஓட்டங்களைப் பெற்றார். இருபது ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டு களை இழந்து 145 ரன்கள் எடுத்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பெங்கள+ர் அணியின் தொடக்க வீரர் மேடிசன் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் பார் த்திவ் படேல், அணித் தலைவர் விராட் கோலி ஜோடி இருவரும் இணைந்து 5.5 ஓவர்களில் 50 ஓட்டங்களைப் பெற்றனர். 28 பந்துகளில் 37 ஓட் டங்களைப் பெற்றிருந்த நிலையில் படேல் ஆட்ட மிழந்தார்.
அதன்பின்னர், விராட் கோலி, யுவராஜ் சிங் இருவரும் இணைந்து 84 ஓட்டங்களைக் குவித்த னர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய யுவராஜ் சிங் அரைச்சதம் கடந்தார். விராட் கோலி 49 ஓட்டங் களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பெங்கள+ர் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. 4 ஓவர்களில் 18 ஓட்டங்களைக் கொடு த்து 1 விக்கெட் வீழ்த்திய பெங்கள+ர் அணியின் வீரர் யுஸ்வேந்திர சஹல் ஆட்ட நாயகனாகத் தேர் ந்தெடுக்கப்பட்டார்.

ad

ad