புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

''கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் என்னை ஆதரிக்க வேண்டும்'' தேவ கௌடாவின் வேட்பாளர் ரூத் மனோரமா என்கிற தமிழச்சி 
கர்நாடகத்தில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கர்நாடகத்தில் பிரதான தேசிய கட்சிகளான
காங்கிரஸும் பி.ஜே.பி-யும் எந்த ஒரு தமிழ் வேட்பாளர்களையும் அறிவிக்கவில்லை. தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் மட்டுமே பெங்களூரு தெற்கு தொகுதியில் தமிழ்ப் பெண்ணான, மாற்று நோபல் பரிசு பெற்ற சமூக சேவகி ரூத் மனோரமாவை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.   கர்நாடகத்தில் வரும் 17-ம் தேதி தேர்தல் என்பதால், தீவிர தேர்தல் பிரசாரத்தில் இருந்த அவரிடம் பேசினோம். ''என்னுடைய சொந்த ஊர் சென்னை. ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ. சமூகவியல் படித்துக்கொண்டிருந்தபோது இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்டிருந்தபோது டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்சிய சிந்தனையில் வளர்ந்த நான், மாணவிகளின் தலைவியாக இருந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறேன்.

ad

ad