புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

அதிமுக வுக்கு பெண்கள் மாபெரும் ஆதரவு .இரண்டாம் இடம் பாஜகூ க்கு தி மு கவுக்கு அதிமுக இன் பாதியளவே 
ஜூ.வி. எடுத்துவரும் ஸ்பெஷல் சர்வே வரிசையில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது 'பெண்கள் வாக்கு யாருக்கு?’ என்ற சர்வே.

 நன்றி ஜூ வி 
நாட்டில் சரி பாதியான பெண்கள், அரசியலின் தலைவிதியை அரசாங்கத்தின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் பெண்களின் மனவோட்டம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதை அறியத் திட்டமிட்டோம். அதற்கான கேள்விகளுடன் நமது நிருபர்களும் மாணவ நிருபர்களும் தமிழ்நாட்டின் முக்கியமான பகுதிகள் அனைத்துக்கும் சென்று 5 ஆயிரத்து 555 பெண்களைச் சந்தித்து சர்வே எடுத்தார்கள். இந்தப் பெண்கள் அனைவருக்கும் அரசியலைப் பற்றியும் நாட்டு நிலைமையைப் பற்றியும் அளவுக்கு அதிகமான வருத்தம் இருக்கிறது. அன்றாட வாழ்க்கைப் பிரச்னையே அவஸ்தைக்குரியதாக மாறிவருவதை அவர்களால் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
நெல்லையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், ''விலைவாசியும் ஏறிடுச்சி. கரன்ட் பிரச்னையும் இருக்குது. நீங்க எந்தப் பிரச்னை இருக்குதுன்னு கேட்டு இருக்கீங்க. இதுல எல்லாமேதான் இருக்கு. எல்லாத்தையும் டிக் பண்ணிடவா?'' என்று விரக்தியில் விசாரித்தார்.
''ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப்போட போகும்போது இந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுன்னு வீட்டுல இருக்குற ஆம்பளைங்க சொல்லி விடுவாங்க. ஆனா, நான் எனக்கு புடிச்ச கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவேன். இந்த தடவையும் அப்படித்தான்!'' - இது கோவை அம்மணியின் ஓப்பன் டாக். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தார்கள்.
இந்த சர்வேயில் கலந்துகொண்டதில் 78 சதவிகிதம் பேர் தேர்தலில் நிச்சயம் வாக்களிப்பேன் என்று சொன்னார்கள். ஓட்டுப் போடும்போது யாரிடமும் ஆலோசனை கேட்க மாட்டேன், சுயமாகத்தான் முடிவெடுப்பேன் என்று பெரும்பான்மை பெண்கள் சொன்னது, பெண்களின் மனதில் ஏற்பட்டுவரும் மாறுதலைக் காட்டுகிறது. விலைவாசியும் மின்வெட்டும் தங்களை அதிகம் பாதித்த விஷயங்களாகச் சொல்கிறார்கள். மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருந்தாலும் அரசியல்வாதிகள் தரவிடமாட்டார்கள் என்றும் கிடைக்காது என்பதும் நடைமுறை யதார்த்தமாக இருப்பதை இவர்கள் உணர்ந்துள்ளனர்.
பெண் என்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிக்க மாட்டோம், அவரை ஒரு அரசியல்வாதியாகத்தான் எடைபோடுவோம் என்பது பெரும்பான்மை பெண்களின் கருத்து. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு 82 சதவிகித பெண்களது ஆதரவு இருக்கிறது. டாஸ்மாக் கடையை மூடினால்... ஆளுங்கட்சி, பெண்கள் அனைவரின் ஆதரவையும் அள்ளமுடியும் என்பது தெரிகிறது.
அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்பதற்கு நரேந்திர மோடியையே பெரும்பாலான பெண்கள் டிக் செய்துள்ளார்கள். அவருக்கு அடுத்த இடம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது.
ஆனால், உங்கள் ஓட்டு யாருக்கு என்ற கேள்விக்கு இவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு என்று சொல்லியிருக்கிறார்கள். பி.ஜே.பி. கூட்டணியைக்விட 10 சதவிகித அதிக வாக்குகளை அ.தி.மு.க. அள்ளுகிறது. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை டிக் செய்பவர்கள், வாக்களிப்பது அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்வது முரண்பாடாகத் தெரியலாம். அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பவர்களுக்குக்கூட ஜெயலலிதா பிரதமர் என்று சொல்வதை ஏற்க முடியவில்லையோ என்று சொல்லத் தோன்றுகிறது!
இதோ அந்த சர்வே முடிவுகள்...

ad

ad