புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

நக்கீரனின் மீதி கணிப்பு முடிவுகள்.இது நக்கீரனின் கணிப்பு எமது இணையத்தினுடையது அல்ல


"இந்த வேகாத வெயிலில் என்னத்தைக் கேக்குறீக...?''’என்று இழுத்த கோவில்பட்டி தாய்க்குலம், ""அவசியம் போடணும்னா குடுங்க'' என படிவத்தை வாங்கி, டிக் அடித்துவிட்டு நடையைக் கட்டினார். 

கயத்தாறுவில் பாத்திமாவுடன் அருகில் இருந்த அவரின் கணவரும் ‘அதுக்கு இதுக்கு’என்கிறபடி சொல்ல, "ஆக்கும்... நானாதான் டிக் போடு வேன்...'’என பிடித்தமான சின்னத்தை ஓ.கே. செய்தார். 

""யாருக்கு போட்டு என்ன ஆகப்போகுது...''’எனச் சலித்தாலும், தன் கருத்தைத் தெரிவிக்க நாகலாபுரம் விஜயலட்சுமி மறுக்கவில்லை. பசுவந் தனையில் சந்தித்த மீசைக்காரர்,"" பார்த்தீங்களா, சூரங்குடி, வேம்பார் பகுதிகளில் எங்க கொடிதான் பறக்குது, பார்த்தீங்களா?''’என கேட் டுக்கொண்டே டிக் அடித்தார். 

""யார் வந்தால் என்ன? வரா விட்டால் என்ன?'' விரக்தியாய் டிக் அடித்தார் தூத்துக்குடிப் பெரியவர்.


திருவைகுண்டம் ச.ம. தொகுதிக்கு உட்பட்ட சிவகளையைச் சேர்ந்த பால்பாண்டி, கேரளம், ஆந்திரா, தமிழ்நாடு என பல பகுதிகளுக்கு இங்கிருந்து தான் வாழை ஏற்றுமதி ஆகிறது. வாழை பதனிடுநிலையம் அமைப்பதாக வாக்குறுதி மட்டும் தந்துகொண்டே இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் இதுபோல வாக்குறுதியை நிறைவேத்தலைனா அந்த கட்சி சார்பிலேயே யாரையும் இந்த தொகுதியில போட்டியிடத் தடை விதிக்கணும்''’என்று அதிரடி அளித்தார். 

படுக்கப்பத்து பெரியவர் பேச்சியப்பனோ, ""போன சட்டமன்ற தேர்தலுக்கு இலை மற்றும் கை சின்னத்துக்காரங்க, வர்றவன் போனவன்கிட்டெல்லாம் எல்லாம் நோட்டா நீட்டுனாங்க. இந்த முறை ஒருத்தனும் எட்டிப் பார்க்கலை''’என்றார் காட்டமாக. 

புதுக்கோட்டை, சண்முகபுரம் பகுதிகளில் இப்போதே அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக, நம்மிடம் பலர் தெரிவித்தனர்



ச்சிவெய்யில் வறுத்தெடுக்க, இளநீர்,  நீர்மோர் உதவியோடு வெய்யிலை சமாளித்தபடியே தொகுதி முழுக்க ரவுண்டடித்தோம்.  சந்தித்த பலரும் ""ஓட்டுங் கிறது ரகசியம் இல்லையா? அதை வெளியில் சொல்ல லாமா? வெளியில் சொன்னா பொல்லாப்பு வருமேப்பா. சொல்லப்போனா குடும்பத்துக்குள்ளயே கொழப்பம் உண்டாகும்''’என முதலில் தயக்கம் காட்டினர்.

* சென்ஸிடிவ் தொகுதியான சிதம்பரத்தில் வன்னியர்களும் தலித்து களும் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். சாதீய ரீதியிலான பார்வையே தொகுதி வாக்காளர்கள்  மத்தியில் ஆதிக்கம் பெற்றிருப்பதை உணர முடிகிறது.  தி.மு.க. தவிர்த்த மாற்றுக் கட்சி வன்னியர்கள் மத்தி யில், மாம்பழத்துக்கு ஆதரவு கிடைக்கிறது. விலியனூர் தே.மு.தி.க. பிரமுகரான ராதாகிருஷ்ணன் ‘""இங்க யார் வரனும் என்பதைவிட, யார் வரக்கூடாதுன்னுதான் நாங்க பார்க்கிறோம். இங்க எல்லாக் கட்சி வன்னியர்களையும் கூப்பிட்டுப் பேசியாச்சு.  நீ எந்தக் கட்சியில் வேணும்ன்னாலும் இருந்துக்க, ஆனா இந்தத் தேர்தல் வேற மாதிரி தேர்தல். அதனால நமக்கு மாம்பழம்தான்னு முடிவு பண்ணிக் கன்னு சொல்லிட்டோம்''’என்றார் பகிரங்கமாகவே.

* இதேபோல் தலித் தரப்பும் முழுக்க முழுக்க,  சிறுத்தைகள் திருமாவை பலமாக ஆதரிக்கிறது. பா.ம.க.வேட்பாளரான சுதா மணிரத்தினத்தின் ஊரான நாட் டார்மங்கலத்தில், மணிரத்தினத்துக்கு ஆதரவு முன்பு பலமாக இருந்தது, இப்போது நிலைமை தலைகீழ்.  மணி, செல்வம் போன்ற இளைஞர்கள் ""மணிரத்தினம் தரப்பு இங்கு வரக்கூடாதுன்னு துரத்தியடிச்சிட்டோம். காரணம் எங்க சமூகத்தின் எதிரியை போய்ப் பார்த்த சமூக துரோகி மணிரத்தினத்தை எப்படி நாங்க ஆதரிக்க முடியும்? தொகுதி முழுக்க திருமா அலைதான் அடிக்குது''’ என்றார்கள் காட்டமாய்.

* பொதுவாக பரங்கிப்பேட்டை, பிச்சாவரம், தில்லை, புதுக்குப்பம் என கடலோர கிராமங்களில் இருக்கும் மீனவர்கள், பொதுவாக  இலையின் ஆதரவாளர் களாகத்தான் இருப்பார்கள். இப்போது இவர்களிடமும் மிகுந்த மாற்றம் தெரிகிறது. புதுக்குப்பம், தில்லைப் பகுதிகளில் நாம் சந்தித்த மீனவர்களான வின்சென்ட், ராஜா, மணி, செந்தில் போன்றோர் ‘""கடலோட தினம் தினம் போராடறவங்க நாங்க. எம்.ஜி.ஆருக்காக காலம் காலமா எலைக்குதான் ஓட்டுப்போட்டோம். ஆனா இந்த முறை காங்கிரஸில் இருந்து விலகி வந்த காரணத்துக் காகவே சூரியக் கூட்டணிக்கு நாங்க ஆதரவு கொடுக்கப் போறோம். காரணம் எங்க மீனவர்கள் இலங்கையால் கொல்லப்பட்ட போதேல்லாம், காங்கிரஸ் கொஞ்சம் கூட இரக்கம் காட்டலை. இந்தம்மாவும் பேருக்கு டெல்லிக்குக் கடிதம் எழுதுனாங்களே தவிர மனப்பூர்வமா போராடலை. அதனாலதான் இந்த முடிவு''’ என்றார்கள் அழுத்தமாய். 

* கீழச்சாவடி கிராமத்துக்கு போனபோது அங்கிருந்த பெண்கள் ""வாங்க ராசாக்களா? குடிதண்ணிக்கு நாங்க படற கஷ்டத்த வந்து பாருங்க''’என்றபடி அங்கங்கே தோண்டப்பட்டிருந்த குழிகளைக் காட்டினர். குழிகளுக்குள் இறங்கி ஊற்று தோண்டி, நீர் ஊறும்வரை காத்திருந்து, குனிந்து குனிந்து மொண்டனர். ""பார்த்தீங்களா? இப்படி குனிஞ்சி குனிஞ்சி தண்ணி எடுக்கறதுலேயே எங்க முதுகெலும்பு ஒடையுது. எந்த அரசியல்வாதியும் கண்டுக்கலை. அப்படி இருக்க, ஓட்டுப்போட எப்படி மனசு வரும்?''’என்றார்கள் ஆதங்கமாக.

* அரியலூர் ரேணுகாம்பாள் ""எப்பவும் எலைக்கு போடுவேன். ஆனா இப்ப சூரியனுக்குத் தான் போடப்போறேன்'' என்று சொல்ல, இதைக் கவனித்துக் கொண்டிருந்த அவரது மருமகள், தன் மகனை அழைத்து ‘""பார்த்தியாடா உங்க பாட்டி சொல்றதை? சூரியனுக்கு போட போவுதாம். உடனே உங்கப்பனுக்கு போனைப் போட்டு சொல்லுடா. அவர் ஊர்பூரா எலைக்கு ஓட்டுக் கேட்டுகிட்டு அலையிறார்ல, அவருக்கு அவங்கம்மா லட்சணம் தெரியட்டும்''’என்று சத்தம் போட, பதிலுக்கு ரேணுகாவும் ""அடப் போடி,  பெருசா வந்துட்டே. அந்தம்மா வந்த பொறகுதான் கரண்ட்டையே பாக்க முடியலை. குடிக்கத் தண்ணி கிடைக்கலை. வெலைவாசி ஏறிப்போய்க் கிடக்கு. பெருசா பொங்கிக்கிட்டு வர்றா''’என எகிற, ""அட ஆளை விடுங்கம்மா''’என எஸ்கேப் ஆனோம். 


மிழ்நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கே என்று பராசக்தியில் சிவாஜி கேட்டதுபோலத்தான் இருந்தது தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதி வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் திருவள்ளூர் தொகுதியின் குரல். தனித் தொகுதியான இங்கு, உங்க ஓட்டு யாருக்கு என்று நாம் சர்வே படிவத்தை நீட்டியவுடனேயே, ""அதை ஏன் நாங்க உங்ககிட்ட சொல்லணும். இல்ல, ஓட்டுக்குப் பணம் தரப்போறீங்களா'' எனக் கேட்டனர் மக்கள். 

திராவிடக் கட்சிகள் மேல் மக்களுக்கு வெறுப்பு, சலிப்பு, அதனால் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், கள நிலவரத்தில் இரண்டு பெரிய திராவிட அரசியல் கட்சிகளான அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும்தான் மாறி மாறி டிக் செய்தனர் வாக்காளர்கள். தி.மு.க ஆதரவு வாக்குகள் இம்முறை திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகளுக்குப் போய்ச் சேருகிறது. இரண்டு பெரிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக தே.மு.தி.க.வை ஆதரிக்கிறார்கள்.

""யாரு வந்து என்ன பண்ணுறது தம்பி,  அவங்கவங்களைத்தான் செழிப்பாக்கிக் கிறாங்க. இங்கப்பாருங்க வீட்டுவாசலி லேயே சாக்கடை ஓடுது. இதோட நாத்தத்துக்கு நடுவுல ஒருவாய்கூட சாப்பிட முடியலை. மந்திரிங்க வீட்டு வாசலிலே இப்படி சாக்கடை ஓடுமா?'' என நியாயமாகக் கேட்டார் பூந்தமல்லி இல்லத்தரசி சித்ரா.

சிட்டிங் எம்.பியை ஜெயிச்சதுக்குப்பிறகு பார்க்கவேயில்லை என்கிற புகாரும், எந்தத் திட்டமும் நிறைவேறவில்லைங்கிற குற்றச்சாட்டும் மற்ற தொகுதிகளைப் போலவே இங்கும் அதிகளவில் உள்ளது. மாதவரத்தில் ஒரு பெரியவர், ""தம்பி... உங்களுக்கு கோடி புண்ணியமா போகட்டும். அந்த விஜயகாந்த்தை கொஞ்சம் பேச வேணாம்னு சொல்லுங்க. அவங்க வீட்டம்மா மட்டும் பேசட்டும்'' என்று வித்தியாசமான கோரிக்கை வைத்தார்.

தேர்தலை ஒரு சடங்காக பார்க்கும் மனநிலையில் மக்கள் இருப்பது தெரிகிறது. குடிநீர் பிரச்சினை, மின்வெட்டு, விலைவாசி உள்ளிட்ட அடிப்படைப் பிரச் சினைகளால் வாழ்வின் சகல பக்கங்களும் பாதிப்படைந்திருப்பதைச் சொல் கிறார்கள். 




சித்திரை வெக்கையைப் போலவே, திவ்யா-இளவரசன் காதலும், இளவரசன் தற்கொலையும் தொகுதி முழுக்க வியாபித்து புழுங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தர்மபுரி அதியமான்கோட்டையில் ஜெயக் கொடி என்பவரிடம் நமது சர்வே படிவத்தை நீட்டினோம். ""எலெக்ஷன் சர்வேயா? போன எலெக்ஷன்ல கூட யாரோ வந்தாங்க. வேற ரெண்டு பேர்ட்ட கேட்டு எழுதிட்டுப் போனாங்க. என்கிட்ட கேட்கலியேனு நெனைச்சேன். இப்ப என்கிட்ட கேட்டுட்டீங்க. எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்பப் புடிக்கும். அதனால ரெட்டை எலையைப் புடிக்கும். என் பையனுக்கு விஜயகாந்த்தை ரொம்ப புடிக்கும். "அம்மாம்மா... இந்த தடவை எங்க கேப்டனோட கூட்டணி வச்சிருக்கிற மாம்பழத்துக்கு போடும்மா'னு கேட்டான். "அட போடா, எனக்குப் புடிச்சதுலதான் நான் போடுவேன்'னு சொல்லிட்டேன்...'' என்றவாறே படிவத்தை வாங்கி டிக் செய்து கொடுத்தார் ஜெயக்கொடி.

லளிகத்தைச் சேர்ந்த ராதாமணி, அரசு ஊழியர். ""ஸாரி... வெரி ஸாரி... பூத்துல நான் ரகசியமா பட்டனை அழுத்துவேன். உங்க பேலட் சீட்ல பகிரங்கமா என்னால டிக்  அடிக்க முடியாது. ஏன்னா, நான் கவர்ன்மெண்ட்  சர்வன்ட்'' கருத்துக் கணிப்புப் படிவத்தை திரும்பிக் கொடுத்தார் ராதாமணி. 

தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு மண்டபம் உள்ள பாப்பாரப் பட்டியில், ஜெயம்மா என்ற மூதாட்டி ""ஒரு ஓட்டுக்கு மூவாயிரம், நாலாயிரம் கொடுக்கப் போறதா பேசிக்கிறாங்களே... நீ எவ்வளவு கொடுக்கப்போறே?'' என்று மெல்லிய குரலில் கேட்டார். ""பாட்டி யம்மா...  ஓட்டுக்கு காசு வாங்கினாலும் தப்பு, கொடுத்தாலும் தப்பு. ரெண்டுக்கு மே சிறைத் தண்டனை உண்டு'' என்றோம். ""நானும் வெளை யாட்டுக்குத்தான் சொன்னேன். எனக்கு கை ஆடும். நான் சொல்ற சின்னத்துல நீயே டிக் பண்ணிக்க'' என்று சின்னத்தைச் சொன்னார்.

""வாங்க உட்காருங்க. வெயிலுக்கு மோருதான் லாயக்கு. மோரு வேணுமா? தண்ணி வேணுமா?'' இண்டூர் முருகன் உறவினர்களைப்போல அன்போடு உபசரித்தார். ""கொண்டாங்க'' என்று படிவத்தை கேட்டு வாங்கி, மாம்பழத்தை "டிக்' செய்தார். இந்த எம்.பி. எலெக்ஷன்ல எங்க வீட்ல இருக்கிற 7 ஓட்டும் மாம்பழத்துக்குத்தான். எங்க குடும்பப் பெண்களுக்கு இப்ப பாதுகாப்பே பா.ம.க.தான்'' மடமடவென ஒப்பித்தார் முருகன்.

அரூர் பொய்யப்பட்டியில் கூலி வேலைக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு தலித் தம்பதியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""நத்தத்தில் யாரோ ஒருத்தன் ஒரு வன்னியப் பெண்ணை விரும்புனானாம். அதுக்காக 3 கிராமத் தைச் சாம்பலாக்கணுமா? அதுக்கும் கூலி வேலைக்குப் போனாத்தான் சோறுனு வாழ்ற எங்களை எதிரியா நெனைக்கணுமா? ஓட்டுக்காக சாதி ஒத்துமை பேசுறாக. நான் சூரியன்லதான் டிக் பண்ணுவேன். அந்தக் கட்சிக் கூட்டணிதான் சாதி மதத்துக்கு சப்போர்ட் செய்யாதவங்க. அட... தெருவுல ஓடுற ஒரு நாய்மேல கல்லெடுத்து வீசிப் பாருங்க. திரும்பி நின்னு குரைக்கும். அதைவிடவா நாங்க சுரணையில்லாமப் போயிட்டோம்'' ரௌத்திரம் கண்களில் சிவக்குமாறு சொல்லிவிட்டுப் போனார்கள் அந்தத் தம்பதியினர்.

வெங்கட்டம்பட்டி கிராமத்தில் மளிகைக் கடைக்காரரிடம் படிவத்தை நீட்டினோம். ""நான் சி.பி.ஐ. உறுப்பினன். எங்க கட்சி, பகுஜன் ரஜினிகாந்த்துக்கு ஓட்டுப் போடச்சொல்லுது. நத்தம் சாதிக் கலவரத்தில் ஒருதலையா சப்போர்ட் செஞ்ச அவருக்கு நான் எதுக்கு ஓட்டுப்போடணும். கம்யூனிஸ்ட் தோழர்கள்... எந்த சாதிக்கும் மதத்துக்கும் ஆதரவா இருக்கக்கூடாது. நான் சொல்றது சரியா?'' கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் டிக் செய்தார்.

பென்னாகரத்தில் அமானுல்லா சொன்ன கருத்து வித்தியாசமா இருந்தது. ""பிரதமர் வேட்பாளராக பி.ஜே.பி.யில் வாஜ்பாய் அறிவிக்கப் பட்டிருந்தால், அநேகமா என் ஓட்டு தாமரைக் குத்தான். இந்த எம்.பி. தேர்தல்ல நாமெல்லாம் தி.மு.க.விற்கே ஓட்டுப்போடணும்னு  எங்க ஜமாத்ல முடிவு செய்திருக்கோம்'' வெளிப்படையாகக் காரணத்தைச் சொன்னார் அமானுல்லா.

"கெம்ப்ளாக்ஸ் போன்ற கம்பெனிகளின் கழிவுகளால் மேட்டூர் டேமே மாசுபட்டுப் போச்சு. நிலத்தடி நீர் விஷமாப் போச்சு. மக்களின் ஆரோக்கியத்தில் எந்தக் கட்சிக்கும்  அக்கறை யில்லை. இவர்களுக்கெல்லாம் ஓட்டு ஒரு கேடா' என்ற கோபம், மேட்டூரின் பல இடங்களில் வெளிப்பட்டது.
""இன்னும் 10 வருஷத்தில் இந்த பூமி, மனுச மக்கள் வாழத் தகுதியில்லாமல் போகப் போகுது. அந்த அளவுக்கு பொஸிசன் மோசமா போச்சு. இதைப்பத்திக் கவலைப்படாத அரசியல்வாதி களுக்கு எங்க எதிர்ப்பை தெரிவிக்கிறதுக்காக நாங்க நோட்டாவுக்கே ஓட்டுப் போடப் போறோம்'' ஒரே போடாய் போட்டார் மேட்டூரில் 27 வாக்குகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் உறுப்பினரான உமா மகேஸ்வரி.

குச்சாண்டியூரில் நமது படிவத்தில் டிக் செய்து கொடுத்த அரசம்மாள், ""விவசாயக்  கடனால முழி பிதுங்கி நின்னப்ப, மொத்தத்தையும் தள்ளுபடி செஞ்சு எங்க சிரமத்தையும் போக்குனது கலைஞரய்யாதான்'' முகமலர்ச்சியோடு சொன்னார்.

""நாங்களும் சாதி சனத்தோட மரியாதையா வாழ வேணாமா?'' கேட்டுக்கொண்டே மாம்பழத்தில் டிக் செய்த ஜலகண்டபுரத்துக்காரர் ஒருவர், ""நான் அ.தி.மு.க. கிளை நிர்வாகி'' அதிர்ச்சியூட்டி விட்டுப் போனார்.

கம்யூனிஸ்ட்களின் பகிரங்க ஆதரவு பகுஜன் ரஜினிகாந்த் திற்கு என்றாலும், தளி சட்ட மன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ. ராமச்சந்திர னின் மௌன ஆதரவு உதயசூரியனுக்காக என்பதையும் காண முடிகிறது.

ad

ad