சனி, ஏப்ரல் 05, 2014

கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம்
news
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 5பேர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 9ஆம் திகதி தென்னாபிரிக்காவிற்கு பயணமாகவுள்ளனர்.

இது குறித்து நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தகவல் தருகையில்,

இலங்கை தொடர்பிலான செயற்பாடுகளுக்கு
ஆபிரிக்க தேசிய காங்கிரஸை சேர்ந்த சிறப்புத் தூதுவர் ஒருவர் தென்னாபிரிக்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த தூதுவர் இலங்கைக்கு அண்மையில் வருகைதரவுள்ளார். இதனை கவனத்தில் கொண்டு இலங்கையின் தூதுக்குழு ஒன்று கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா சென்று சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது.

அதனடிப்படையில் இலங்கைக்கு வருகை தரமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுவார்த்ததை நடாத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரின் அழைப்பின் பேரிலேயே நாம் அங்கு செல்லவுள்ளோம்.

அதன்படி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன் ஆகிய ஐவரும்  செல்லவுள்ளோம்.

அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை எமது உத்தியோக பூர்வ பயணம் அமைகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது தென்னாபிரிக்கா நடு நிலமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.