புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2014



இணையத்தில் உள்ள திமுக உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம், அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இணையம் வழங்கியிருக்கிறது. உன்னைப் போன்ற பலர் துணிச்சலுடன்  மனதில் பட்டதைப் பதிவுசெய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குக்
கிடைக்கும் சுதந்திரத்தைப் பறிக்க  நடக்கும் அராஜகத்தையும் சொல்லிவிடுகிறாய். நடப்பது திருவிழா அல்ல; அடுத்த ஐந்தாண்டிற்கு நாட்டின் திசையைத் தீர்மானிக்கும் மக்களின் தீர்ப்பு! 
தேர்தல் களத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் பிரதமராவதற்காக நிற்கவில்லை;  இன்றைய நிலையில் நாட்டுக்குத் தேவையான, நல்லிணக்கச் சூழலுக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் பணியாற்ற விரும்பும் கொள்கையுடையவர்கள் வெற்றி பெறவேண்டுமே தவிர தனி நபர்கள் முக்கியமில்லை. தனிநபர்களைவிட அவர்களை இயக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கொள்கைகள் பரிசீலிக்கப்படவேண்டும்.
அச்சுறுத்தலைக் கடந்து கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படவேண்டும். தமிழ் மொழி,கலை, இலக்கியம், மரபு,பண்பாடு, சமத்துவம், சமூகநீதி, மத நல்லிணக்கம் ஆகியவை போற்றப்படவேண்டும். வேர்களைக் காப்பாற்றி விழுது விடும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இவற்றுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் கொள்கைத் தகுதியும் உரிமையும் உடையவர்கள் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
"தி.மு.க. வை யார் குறை கூறினாலும் அங்கே சரியாய் ஆஜராகி பதில் தாக்குதலுக்குத் தயாராய் உடன்பிறப்புகள் உள்ளனர் என்று உன்னைப் பாராட்டி ஆங்கில நாளிதழில் எழுதியிருப்பதைப் பார்த்திருப்பாய். மேலும் அந்த இதழில்,""கட்சிகளின் ஃபேஸ்புக் பக்களுங்களுக்கு லைக்"" என்று ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில், இணையத்தில் "தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 1,22,000 பேர்; அ.தி.மு.க.வுக்கு 30361 பேர்; தமிழக பா.ஜ.க.வுக்கு 12,749 பேர்; தே.மு.தி.க.வுக்கு 6036 பேர்; சி.பி.ஐ.(எம்)க்கு 2747 பேர்; பா.ம.க.வுக்கு 2205 பேர்; ம.தி.மு.க.வுக்கு 1104 பேர் பின் தொடர்பவர்களாக உள்ளனர்"" என்று தெரிவித்துள்ளனர்.
உனது கருத்துகளையும் உணர்வுகளையும் நேரடியாக அறிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் இணையம் உரிய வாய்ப்பளித்திருக்கும் உலகில் உன்னோடு இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.
ஆதிக்க சாதிகளின் அதிகாரப் பசிக்கோ, அதிகார வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தலுக்கோ அடுத்த தலைமுறையின் வாழ்வை அடமானம் வைக்கலாமா? சாதி, மதம் பெயரால் நல்லிணக்க வாழ்க்கைச் சூழலை நாசமாக்க விடலாமா? இது வாழும் காலத்திற்கு நாம் செய்யும் மரியாதையாகுமா?
செம்மொழிப் பூங்கா,தொல்காப்பியப் பூங்கா, அறிவுபெற உருவாக்கப்பட்ட அறிஞர் அண்ணா நூலகம் எல்லாம் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தத் தொடங்கப்பட்ட - அறிஞர் அண்ணா அவர்களின் கனவான சேது சமுத்திரத் திட்டம் தொடர வழிவிடப்படவில்லை.
இந்தியப் பண்பாட்டு ஆணி வேரைத் தேடிப்போனால் அது சிந்துவெளித் தமிழர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு  ஆணி வேரில் ஆசிட் ஊற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கலாமா?
இணைய உடன்பிறப்பே!
இதை, உற்றார் ,உறவினர், நண்பர்களுக்குத் தெரிவிப்பதோடு உலகுக்கும் நீ உணர்த்த வேண்டாமா? என்று கூறியுள்ளார்

ad

ad