புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

நாளை இளையராஜாவின் இசை மழை!

 மதுரையில் நாளை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் "இசை மழை' நடக்கிறது. கார்த்திக்ராஜா வழங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் "ராஜாவின் சங்கீதத்திருநாள்' இசை நிகழ்ச்சி,
மதுரை தமுக்கம் மைதானத்தில், நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.


பாடகர்கள் ஹரிஹரன், சித்ரா, மனோ, ஹரிச்சரண், விஜய் பிரகாஷ், சாதனா சர்க்கம், ஷாலினி, அனிதா மற்றும் இளையராஜாவின் இசைக்குழுவில் 38 ஆண்டுகளாக இடம்பெற்ற இசைக்கலைஞர்களும் பங்கேற்கின்றனர். அதற்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்து வரும் நிலையில், நிகழ்ச்சியை பிரமாண்டமாக வழங்க துல்லியமான "ஆடியோ சிஸ்டங்கள்', "மெகா' திரைகள், இசையோடு நடனமாடும் விளக்குகள் என தமுக்கம் மைதானம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வருவதால், இந்நிகழ்ச்சியை உலகத் தரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கார்த்திக்ராஜா உடன் இணைந்து, "ஸ்பிலண்டர் ஐ ஸ்மார்ட்' இந்நிகழ்ச்சியை வழங்குகிறது. "ஜி ஒன் மொபைல்', டியூலக்ஸ் வெதர்ஷில்ட் மேக்ஸ், அருண் ஐஸ்கிரீம், சென்னை டாக்டர் எம்.ஜி. ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய பல்கலை ஆகியோர் அசோசியேட் ஸ்பான்சர்கள். "பிரஸ் பார்ட்னர்' தினமலர் நாளிதழ், மீடியா பார்ட்னர் ராஜ் டிவி, "ரேடியோ பார்ட்னர்' ஹலோ எப்.எம்., "ஆன்லைன் பார்ட்னர்' ராகா.
டிக்கெட் கிடைக்கும் இடங்கள் மதுரை சொக்கிகுளம் விஷால் மால், தமுக்கம், மைதானம், கீஷ்டுகானம் ஆடியோ கிளைகள், பெரியார் பஸ் ஸ்டாண்ட் நியூ லக்கி டிராவல்ஸ், தல்லாகுளம் ஹலோ எப்.எம்., "தி மொபைல்' ஸ்டோர் கிளைகள், காமராஜர் சாலை நிப்பான் பர்னிச்சர்ஸ் சென்று நேரடியாக கட்டணம் செலுத்தி "டிக்கெட்' பெறலாம். 
"இண்டியன் ஸ்டேஜ் டாட் இன்' மற்றும் "புக் மை ஷோ' இணையதளங்களிலும் "ஆன் லைன்' மூலம் டிக்கெட் புக் செய்யலாம்.

ad

ad