புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

இந்திய ஹாக்கி அணி நெதர்லாந்து பயணம்
உலகக் கோப்பைக்குத் தயாராகும் முயற்சியில் இறங் கியுள்ள இந்திய ஹாக்கி 
அணி உலகக் கோப்பை நடைபெறவுள்ள நெதர் லாந்துக்கு புதன்கிழமை 

புறப்பட்டுச் சென்றது.
இந்திய ஹாக்கி அணி யின் பயிற்சியாளராக டெர்ரி வால்ஷ் நியமிக்கப்பட்ட பின், இந்திய அணிக்கு பல்வேறு விதங்களில் அவர் பயிற்சியளித்து வருகிறார். நெதர்லாந்தில் மே 31 முதல் ஜூன் 15 வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இப் போதிருந்தே தயாரானால் தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என இந் திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, போட்டி நடைபெறவுள்ள நெதர்லாந்திலேயே பயிற்சி மேற்கொள்வது என முடி வெடுக்கப்பட்டது. அய்ரோப் பிய ஆடுகளங்கள் மற்றும் அங்குள்ள சூழலை எளிதில் புரிந்துகொள்வது இந்திய அணிக்கு உலகக் கோப்பை யில் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
நடுகள வீரரான சர்தார் சிங் தலைமையில் 21 வீரர்க ளுடன் இந்திய அணி நெதர் லாந்து சென்றது. ஏப்ரல் 19ஆம் தேதி வரை நெதர் லாந்தில் தங்கி இருக்கும் இந்திய அணி 5 பயிற்சி ஆட் டங்களில் பங்கேற்கிறது.
இதில் இரண்டு ஆட்டங்கள் நெதர்லாந்துக்கு எதிரானவை. மற்ற இரண்டு ஆட்டங்க ளில் நெதர்லாந்து கிளப் அணிகளுடன் மோதவுள் ளன. தவிர, பெல்ஜியம் அணி யுடனும் பயிற்சி ஆட்டத் தில் பங்கேற்கின்றன.

ad

ad