புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


நிதியை இடைநிறுத்தும் தீர்மானத்தை கனடா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்


கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுநலவாய நாடுகளுக்கான நிதி இடைநிறுத்தப்படும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் கனடியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ் பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள்
அரசால் வழங்கும் பணத்தை இடைநிறுத்துவதாக தங்கள் அரசு எடுத்த முடிவை மீள்பரிசீலிக்குமாறு உரிமையுடன் வற்புறுத்தி வேண்டுகின்றேன்.
அம்முடிவு உங்கள் உரிமையாக இருப்பதால் நான் இதை ஓர் சவாலாகவோ குற்றமாகவோ எடுக்கவில்லை. ஆனால் மிக்க மரியாதையுடன் இத்தீர்மானமானது கால்நூற்றாண்டுகளுக்கு மேல் நடைபெற்ற யுத்தத்தினால் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்த மக்களுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அரசியலில் 60 ஆண்டுகளுக்கு மேலும், 80 வயதைத் தாண்டியும், 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து 2006ஆம் ஆண்டுகளுக்குரிய பொறுமையையும் அகிம்சையையும் முன்னெடுக்க வழங்கப்படும் யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருதைப் பெற்றவன் நான். உங்களுடைய நாடு எமது நாட்டுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு பற்றியும், எமது நாட்டை முன்னேற்ற உங்கள் நாடு தந்த உதவிகள் பற்றியும் நாம் நன்கு அறிவோம்.
நம்நாட்டு பிரதம அமைச்சர்களில் ஒருவராகிய அமரர் எஸ்.டபில்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் பெயரைச் சுமந்து நிற்கும் கட்டுநாயக்கவில் இரு நாடுகளின் உறவை உறுதிப்படுத்தும் நிரந்தரச் சின்னமாக விளங்கும் சர்வதேச விமான நிலையம் உங்கள் நாடு தந்துதவிய பெரும் உதவிகளில் ஒன்றாகும்.
உங்கள் நாட்டின் 9 மாகாணங்களின் பெயர்களை தனித்தனி சுமந்துநிற்கும் டீசல் புகையிரத என்ஜின்கள் நம்நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில் பெட்டிகளை இன்றும் இழுத்துச் செல்கின்றன. உங்கள் நாடு 50 ஆண்டுகளிற்கு முன்பு தந்துதவிய இதுபோன்ற உதவிகளை நம்நாட்டு மக்கள் இன்றும் நன்றியுணர்வோடு நினைவுகூருகிறார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ்த் தலைமை இனப்பிரச்சினை பற்றிப் பேசக்கூடிய சிறந்த அரங்கு பொதுநலவாய அரங்கம்தான் என்று நன்கு தெரிந்திருந்தும் எவரின் முயற்சியுமில்லாமல் தானாகத் தேடிவந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாது பிரித்தானிய புலம்பெயர்ந்தவர்கள் கூறியதை அன்றி வேறு எதுவித பிரச்சினையிலும் தலையிடத் தயாராக இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை மாநாட்டு பிரதிநிதிகள் இங்கிருந்த காலத்தில் 15.11.2013 தொடக்கம் தாங்கள் இந்திய, பிரித்தானிய பிரதமர்களுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்போடு எமது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி எடுப்பீர்கள் என நம்பி ஆறுதலடைகிறேன். அதற்கு முன்னோடியாக சம்பந்தபட்டவர்களின் ஒத்துழைப்பைப் பெற இடைநிறுத்தப்பட்ட உங்கள் தீர்மானத்தை மீள் பரிசீலித்து நிதியை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

ad

ad